முகப்பு
அயல்நாட்டவரையும் ஈர்த்துள்ள இந்தியாவின் UPI பரிவர்த்தனை!
Feb 18, 2026 01:58 AM
36
இந்தியாவின் UPI பரிவர்த்தனை!
டெல்லியில் நடைபெறும் 'இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026' மாநாட்டில் பங்கேற்கும் 40-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்காக 'UPI One World' என்ற புதிய வசதியை NPCI அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய வங்கிக் கணக்கோ, சிம் கார்டோ இல்லாமல், சர்வதேச டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த 'UPI One World' வேலட்டில் பணத்தை ஏற்றி உணவகங்கள், கடைகள் என இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் QR கோர்டை ஸ்கேன் செய்து உடனடியாகப் பணம் செலுத்தலாம்.
பயணம் முடிந்து நாடு திரும்பும் போது, வேலட்டில் மீதமுள்ள பணத்தை மீண்டும் தங்களது சொந்த நாட்டு வங்கிக் கணக்கிற்கே மாற்றிக் கொள்ளும் வசதியும் உண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu