RECENT NEWS

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்.. ரூ.10.62 லட்சம் கோடியாக உயர்கிறது தமிழக அரசின் கடன்..!!

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்.. ரூ.10.62 லட்சம் கோடியாக உயர்கிறது தமிழக அரசின் கடன்..!!

Feb 17, 2026

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்.. ரூ.10.62 லட்சம் கோடியாக உயர்கிறது தமிழக அரசின் கடன்..!!

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்.. ரூ.10.62 லட்சம் கோடியாக உயர்கிறது தமிழக அரசின் கடன்..!!

Feb 17, 2026

BIG STORIES

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்.. ரூ.10.62 லட்சம் கோடியாக உயர்கிறது தமிழக அரசின் கடன்..!!

Feb 17, 2026 04:43 PM

12

சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்.. ரூ.10.62 லட்சம் கோடியாக உயர்கிறது தமிழக அரசின் கடன்..!!

வரும் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசின் கடன் 10 லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு லட்சத்து 79ஆயிரத்து 809 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு 3000 ரூபாய் மற்றும் மகளிருக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் போன்றவற்றால் தமிழ்நாடு அரசுக்கு 10ஆயிரத்து 849 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஆகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், தமிழ்நாட்டில் உள்ள ஆறு லட்சத்து 23ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒரு லட்சத்து 41ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் மொத்த பெண்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டும 41 சதவீதம் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு துவக்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அன்புக்கரங்கள் திட்டம் மூலம் 10,637 குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதியோர்களுக்கு வீடு தேடி ரேசன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டத்தின் மூலமாக 27 லட்சம் பேர் பயன் அடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை & அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நம்மை காக்கும் 48 திட்டம் மூலம் தற்போது வரை 5 லட்சத்து 11 ஆயிரத்து 916 உயிர்களை காத்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட 1086 நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்களின் மூலம் 17 லட்சத்து 82 ஆயிரத்து 687 பேர் பயனடைந்துள்ளனர் என்றும் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் மூலம் 79 லட்சத்து 17 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்து 1,929 பேருக்கு புற்றுநோய் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் உற்பத்தி துறைகளில் முதலீடுகளை ஊக்குவிக்க தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் கோவையில் தங்க நகை பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கை 5 மடங்கு உயர்ந்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

புதிய சிற்றுந்து திட்டம் மூலம் ஆறாயிரத்து 303 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கப்பட்டுள்ளது என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் ரூபாய் 8,363 கோடி மதிப்பிலான 8,113 ஏக்கர் திருக்கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் செலவினங்கள் நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சத்து 78ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களுக்காக 10,849 கோடி ரூபாய் கூடுதலாக செலவிட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு நிதியாண்டில் அரசின் சொந்த வரி வருவாய் 2 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 2 லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் வருவாய் பற்றாக்குறையும் ரூபாய் 69,000 கோடியாக இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 நிதி ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூபாய் 9 லட்சத்து 52ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்றும் அடுத்த நிதி ஆண்டின் முடிவில் கடன் அளவு ஒரு லட்சத்து 21ஆயிரம் கோடி ரூபாய் வரை அதிகரித்து பத்து லட்சத்து 62 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

அன்னக்கிளியே சொந்தமில்லை”.. இளையராஜாவுக்கு தடை விதிப்பு.. அந்த 134 படங்கள் எவை தெரியுமா ?.. நீதிமன்றத்தில் சாதித்தது சரிகம
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies