அரசியல்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட காங். - கனிமொழி சொன்ன பதில் என்ன?
Feb 23, 2026 01:03 PM
21
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட காங். - கனிமொழி சொன்ன பதில் என்ன?
கடந்த முறை வழங்கியதை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த தி.மு.க., இம்முறை கூட்டணி கட்சிகள் யாருக்கும் கூடுதல் தொகுதிகள் வழங்க முடியாது என திட்டவமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் சி.ஐ.டி. காலனியில் உள்ள இல்லத்தில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குழு தலைவர் கிரிஸ் சோடங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை, தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி மட்டுமே பேச வேண்டும் என காங்கிரசாரிடம் கனிமொழி திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இம்முறை கூடுதல் இடங்கள் வேண்டும் என சோடங்கர் தெரிவித்தபோது, கூட்டணிக்கு புதிய கட்சிகளின் வருகையால் கூடுதல் தொகுதிகள் வழங்க முடியாது என கனிமொழி எடுத்துரைத்ததாக சொல்லப்படுகிறது. மாநிலங்களவை தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு சீட் வழங்க வேண்டும் என கிரிஸ் சோடங்கர் கேட்டபோது, அது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பேசிவிட்டு கூறுவதாக கனிமொழி பதிலளித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu