தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு
Feb 23, 2026
தமிழ்நாடு
விஜய்க்கும் - ஸ்டாலினுக்கும் இடையே நடைபெறும் போர் தான் தேர்தல் - விஜய் சூளுரை.
Feb 23, 2026 08:14 AM
37
விஜய்க்கும் - ஸ்டாலினுக்கும் இடையே நடைபெறும் போர் தான் தேர்தல் - விஜய் சூளுரை.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு என உறுதிமொழி பெற்றார் விஜய்.
உறுதிமொழி பெற்று பேச்சை தொடங்கினார் விஜய் உறுதிமொழியை தொடர்ந்து குட்டிக்கதை கூறி பேச்சை தொடங்கினார் விஜய்
சூழலுக்கு தகுந்தது போல் பிரச்சனையை தீர்ப்பது தான் முக்கியம் - விஜய்
வேறு வழியில்லாததால் ஸ்டாலின் கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர் அரசியல் அனுபவம் இருந்தாலும் சூழலை சமாளிக்கத் தெரிய வேண்டும்.
மக்களை எப்போதும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று சந்திக்க வேண்டும் என்பதே என் விருப்பம் தவெக ஆட்சி அமைந்த பிறகு ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரில் வந்து மக்களை சந்திப்பேன்.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் என உருட்டுகிறார் ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கும் என்டிஏவுக்கான தேர்தல் என ஸ்டாலின் கூறுவதில் என்ன லாஜிக் உள்ளது?
தமிழ்நாட்டு மக்களுக்கு சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான வித்தியாசம் தெரியும் தேர்தல் தொடர்பான தெளிவு தமிழக மக்களுக்கு எப்போதும் உண்டு தற்போதைய தேர்தல் தமிழ்நாட்டுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகசீர்கேட்டிற்கும் எதிரான போர்
தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான போர் விஜய்க்கும் - ஸ்டாலினுக்கும் இடையே நடைபெறும் போர் தான் தேர்தல்
தமிழ்நாடு என்றால் விஜய், விஜய் என்றால் தமிழ்நாடு. காமராஜர், எம்ஜிஆர், அண்ணா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் மாநிலமாக இருந்தது இப்பொது ஸ்டேன்ட் அப் காமெடியன் ஆளும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு தற்போது உல்டா ஸ்டார் ஆக உள்ளது 5 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் தேர்தல் அல்ல வரப்போவது
தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைவரும் இணைந்து விஜயை எதிர்க்கின்றனர்.
மக்கள் விஜயுடன் நிற்பதால் எனக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர் தவெகவிற்கு எதிராக எதிரிகள் அவதூறு பரப்புகின்றனர்.
தவெகவிற்கு எதிரான அவதூறுகள் தமிழக மக்களுக்கு எதிரான அவதூறுகள் என்னை அசிங்கமாக பேசினால் மக்களை அசிங்கமாக பேசுவது போன்றதாகும். விஜயும் தமிழக மக்களும் வேறு வேறு இல்லை விஜயும் தமிழக மக்களும் ரத்தமும் சதையும் போல
விஜயையும் தமிழக மக்களையும் யாராலும் பிரிக்க முடியாது. தமிழக மக்களுடனான பந்தம் குறித்து பேசிய போது கண் கலங்கினார் விஜய்.
மக்களை நேசிக்கம் விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஸ்டாலின் வேண்டுமா?
தவெகவிற்கு போட்டி திமுக தான் என்பதும் மக்களுக்கு தெரியும் வாண்டடாக வந்து வண்டியில் ஏறிக் கொண்டு வந்து சிலர் என்னை பேசுகின்றனர்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்களின் சொத்து என்ன?
அரசியலுக்கு வந்த பிறகு உங்களின் சொத்து என்ன?
ஆட்சி அதிகாரத்தின் போது ஆட்டையை போட்ட காசா?
என்னை பற்றி செய்தியாளர் கேட்ட கேள்விக்கு என்னை நண்பர் என்றார் ஸ்டாலின் என்னை நண்பராக நினைத்திருந்தால் கரூர் சம்பவத்திற்கு என் மீது ஏன் பழியை போட்டீர்கள்?
நான் உங்கள் நண்பன் என்றால் என்னுடைய நிகழ்ச்சிக்கு ஏன் அனுமதி கொடுப்பது இல்லை தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் ஸ்டாலின் ஆட்சி தவறான ஆட்சி ஸ்டாலினுக்கு லஞ்சம், ஊழல் தான் நண்பர்கள்
ஒரு சில நேரங்களில் அரசியல் தலைவர்கள் அமைதியாக இருந்தாலே பிரச்சனை தீர்ந்துவிடும்.
மாதம் மாதம் மின்சார கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என திமுகவின் வாக்குறுதி என்ன ஆனது?
கிராமங்களில் பேருந்து வசதி இல்லை என்றால் திமுகவினர் கத்திக் கொண்டு சண்டைக்கு வருவர்.
கிராமங்களில் பேருந்து வசதி உண்டு என்றால் சகோதரி ஒருவர் தன் கிராமத்திற்கு ஏன் மினி பஸ் கேட்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தற்போதும் வீடுகளில் பிரசவம் பார்க்கும் அவலம் உள்ளது.
தமிழ்நாட்டில் WE SAFE MODEL இல்லை WE ARE NOT SAFE MODEL
திமுக ஆட்சியை ஸ்விட்ச் ஆஃப் செய்வது தான் ஒரே சொல்யூசன்.
திமுகவை ஸ்விட்ச் ஆஃப் செய்ய விசில் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தவெக ஆட்சியில் நம்பர் ஒன்னாக இருக்கும்,அரசு பள்ளிகள், கல்லூரிகள் தரத்தில் முதல் இடத்தில் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டம் மாற்றப்படும். போட்டித் தேர்வுகளுக்கு லட்சக்கணக்கல் பணம் செலவழிக்க வேண்டியிருக்காது. உயர்நிலைக் கல்வியில் அரசியல் சாசனம் தொடர்பான விளக்கங்கள் இருக்கும். கல்வி நிலையங்களில் கதவுகள் பொருத்தப்பட்ட தரமான கழிவறைகள் அமைக்கப்படும். மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் கலெக்டர்களில் பெண்களுக்கு சமபாதி வாய்ப்பு. பேருந்து வசதியே இல்லாத கிராமங்கள் தவெக ஆட்சியில் இருக்காது. ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு தனியாக தொழிலாளர் வாரியம்.
அறிவாலயம் பக்கத்தில் நிழலுக்கு ஒதுங்குபவர்களையும் கூட்டணியில் சேர்க்கிறார் ஸ்டாலின் கொள்ளை அடித்த பணத்தில் பங்கு கொடுத்து கட்சிகளை கூட்டணியில் சேர்க்கிறார் ஸ்டாலின் திமுக தலைமையிலான கூட்டணி ஒரு கல்லா பெட்டி கூட்டணி.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu