நகை பறிக்க முயன்று பிடிபட்ட பொறியியல் பட்டதாரி.
Feb 19, 2026
அதிக ஒலி எழுப்பிய ஏர் ஹாரன்கள் பறிமுதல்
Feb 19, 2026
BIG STORIES
பட்டா இல்லாத இடமாங்க.. பிரதமர் வீடு திட்டத்தில் கட்டிய தூய்மை பணியாளர் வீடு இடிப்பு..! ஆக்கிரமிப்பு என ஆக் ஷன்..!
Feb 20, 2026 02:33 AM
20
தூய்மை பணியாளர் வீடு இடிப்பு
திருவாரூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி இருப்பதாக கூறி , தூய்மைபணியாளரின் வீட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர். ஊர்மக்கள் ஆதரவுடன் வீட்டை இடிக்கவிடாமல் தூய்மைபணியாளர் குடும்பத்தினர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.
குருவி சேர்ப்பது போல பணத்தை சேர்த்து, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஒதுக்கீடு பெற்று கட்டப்பட்ட தங்கள் வீட்டை ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்ற வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தூய்மைபணியாளர் குடும்பத்தினர் கண்ணீர் மல்க மன்றாடிய காட்சிகள் தான் இவை.
திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு பகுதியில் திருவாரூரில் இருந்து கும்பகோணம் செல்லும் நெடுஞ்சாலையோரத்தில் பாலமுருகன் - சித்ரா தம்பதியினர் குடியிருந்து வருகின்றனர். கடந்த 60 வருட காலமாக பாலமுருகன் குடும்பத்தினர் இங்கு குடியிருந்து வருவதாக கூறப்படுகிறது. பாலமுருகன் ஊராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் நிலையில், கடந்த 2018-19ம் ஆண்டில் பாரத பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டு தங்கள் சேமித்து வைத்த பணத்தையும் சேர்த்து காங்கிரீட் வீடு கட்டியதாக கூறப்படுகின்றது.
பாலமுருகனுக்கு துர்கா, ஹேமா, பிரியதர்ஷினி என்கிற மூன்று மகள்கள் உள்ளனர். துர்கா கல்லூரி முதலாம் ஆண்டும், ஹேமா செவிலியருக்கும் , பிரியதர்ஷினி பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பாலமுருகன் குடியிருந்து வரும் வீடு இருக்கும் இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி வீட்டை இடிப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சென்றனர்.
வீட்டை இடிக்க பொக்லைனுடன் வந்த அதிகாரிகளிடம் அரசு அனுமதியோடு பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் அனுமதி பெற்று வீடுகட்டியதாக பாலமுருகன் குடும்பத்தினர் தெரிவித்தனர். அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மேற்கொள் காட்டினர். இதனால் 3 நாட்கள் அவகாசம் கொடுக்கும் படி கெஞ்சினர். அதற்கு அதிகாரிகள் சம்மதிக்காததால், நெடுஞ்சாலைத்துறையினரை தடுத்து வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீட்டில் உள்ள பொருட்களை வெளியே எடுத்து வைத்ததால் காலில் விழுந்து குடும்பத்து பெண்கள் கதறி அழுதனர்.
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடம் என்றால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டது எப்படி ? என ஊர் மக்களில் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வீட்டை இடிக்க விடாமல் தடுத்தனர்.
ஊர் மக்கள் ஆதரவுடன் பாலமுருகன் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உங்கள் பெயருக்கு பட்டா இல்லாத இடத்தில் வீடு கட்டியது தவறு என்பதை சுட்டிக்காட்டிய அதிகாரிகள், தொகுப்பு வீடு கட்டும் போது அதில் ஒரு வீடு ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்து அந்த வீட்டை இடித்து அகற்றினர்.
ஊர் மக்கள் உதவியுடன் , தற்காலிகமாக ஊராட்சி அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள தூய்மை பணியாளர் குடும்பத்தினர் கதறி அழுதபடியே காத்திருந்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu