RECENT NEWS

ரூ.23 கோடி மோசடி வழக்கு.. பெண் காவல் அதிகாரியிடம் சிக்கிய ரூ.1 கோடி வரைவோலை எங்கே? கைது செய்யாமல் விடுவித்தது ஏன்?

ரூ.23 கோடி மோசடி வழக்கு.. பெண் காவல் அதிகாரியிடம் சிக்கிய ரூ.1 கோடி வரைவோலை எங்கே? கைது செய்யாமல் விடுவித்தது ஏன்?

Feb 20, 2026

ரூ.23 கோடி மோசடி வழக்கு.. பெண் காவல் அதிகாரியிடம் சிக்கிய ரூ.1 கோடி வரைவோலை எங்கே? கைது செய்யாமல் விடுவித்தது ஏன்?

ரூ.23 கோடி மோசடி வழக்கு.. பெண் காவல் அதிகாரியிடம் சிக்கிய ரூ.1 கோடி வரைவோலை எங்கே? கைது செய்யாமல் விடுவித்தது ஏன்?

Feb 20, 2026

BIG STORIES

ரூ.23 கோடி மோசடி வழக்கு.. பெண் காவல் அதிகாரியிடம் சிக்கிய ரூ.1 கோடி வரைவோலை எங்கே? கைது செய்யாமல் விடுவித்தது ஏன்?

Feb 20, 2026 02:26 AM

35

ரூ.23 கோடி மோசடி வழக்கு.. பெண் காவல் அதிகாரியிடம் சிக்கிய ரூ.1 கோடி வரைவோலை எங்கே? கைது செய்யாமல் விடுவித்தது ஏன்?

ரூ.23 கோடி மோசடி வழக்கு

சென்னையில் உள்ள பிரபல லாஜிஸ்டிக் நிறுவனத்தில் 23 கோடி ரூபாயை கையாடல் செய்த புகாரில் குற்றஞ்சாட்டப்பட்ட 2வது நபரை கைது செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு பெண் காவல் அதிகாரி ஒருவர், முதல் நபரிடம் இருந்து நிறுவனத்தின் பெயரில் ஒரு கோடி ரூபாய்க்காண வரைவோலையை பெற்றுக் கொண்டு கைது செய்யாமல் விடுவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல லோஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் திபேஷ் தங்கமணி. கடந்த 2022 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர், தனக்கு தெரிந்த கார்த்திக் என்பவரை திட்ட மேலாளராகவும், சாம் அலெக்சாண்டர் என்பவரை லாஜிஸ்டிக் மேலாளராகவும் நியமித்து வரவு செலவுகளை கவனித்து வந்தார். திபேஷ் தங்கமணி உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து , வணிகத்தை பெருக்குவதாக கூறி கடந்த 3 ஆண்டுகளில் போலியான நிறுவனங்களுக்கு, போலியான லாரி உரிமையாளர்களின் பெயர்களில் ஷிப்பிங் ஆர்டர் கொடுத்து சுமார் 23 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்திருப்பதை கடந்த 2025 ஆம் ஆண்டு ஆடிட்டிங் மூலம் கண்டறிந்துள்ளனர்.

தாங்கள் யார் யாருடைய வங்கி கணக்குகளை பயன்படுத்தி, போலி ஆவணங்களை தயார் செய்தோம் ? என்பதையும், யார் யாருடைய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி கையாடல் செய்தோம் ? என்பதையும் கைப்பட விரிவாக எழுதிக்கொடுத்த சிஓஓ திபேஷ் தங்கமணி , தான் 6 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக ஒப்புக் கொண்டதோடு, தனது மகனை வெளி நாட்டில் படிக்க வைக்க அந்த பணத்தை பயன்படுத்தியதாகவும், ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதே போல கார்த்திக் 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், சாம் அலெக்ஸாண்டர் 11 கோடி ரூபாய் கையாடல் செய்ததாகவும் ஒப்புக் கொண்டு எழுதிக் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கையாடல் செய்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடித்ததால் சம்பந்தப்பட்ட லாஜிஸ்டிக் நிறுவனம் 3 பேரின் மீதும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது. புகாரின் பேரில் வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் கீதாஞ்சலி, உத்தரவின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 2 வது நபரான கார்த்திக்கை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்ததாக கூறப்படுகின்றது. வழக்கமாக செய்தி குறிப்பு அனுப்பும் போலீசார் இந்த தகவலை செய்தியாளர்களுக்கு தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் 18 ஆம் தேதி இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதல் நபரான திபேஷ் தங்கமணியை விசாரணைக்கு அழைத்தார் துணை ஆணையர் கீதாஞ்சலி. விசாரணைக்கு தனது வழக்கறிஞருடன் ஆஜரான திபேஷ் தங்கமணி , கையோடு தான் பணிபுரிந்த நிறுவனத்தின் பெயரில் 1 கோடியே 2 1/2 லட்சம் ரூபாய்க்கு 11 வரைவோலைகளை எடுத்து வந்ததோடு, பணத்தை திருப்பி கொடுத்து விடுவதாகவும் கூறி அதனை துணை ஆணையர் கீதாஞ்சலியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகின்றது.

வரைவோலைகளை பெற்றுக் கொண்ட துணை ஆணையர் கீதாஞ்சலி, மோசடி செய்த 6 கோடி ரூபாய் பணத்தில் இன்னும் ரொக்கமாக எவ்வளவு பணம் கையில் உள்ளது ? என்று கேட்டதாகவும், 2 கோடி ரூபாய் வரை ரொக்கப் பணம் இருப்பதாக கூறிய நிலையில் , திபேஷ் தங்கமணியை கைது செய்யாமல், விடுவித்து வீட்டுக்கே அனுப்பி வைத்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலக உயர் அதிகாரியிடம் கேட்ட போது, திபேஷ் தங்கமணி சட்டப்பிரிவு 35((111)) என்ற சம்மனில் விசாரணைக்கு ஆஜரானார், அவர் கையில் 1 கோடி ரூபாய்க்காண வரைவோலைகளை கொண்டு வந்தாரா ? என்பது தெரியவில்லை என்றார். மேலும் திபேஷ் தங்கமணியை வழக்கில் இருந்து விடுவிக்கவில்லை, குற்றஞ்சாட்டப்பட்ட திபேஷ் தங்கமணியை காவல் ஆணையர் சொன்னதால் தான், கீதாஞ்சலி வீட்டுக்கு அனுப்பி வைத்தார் என்றும் எப்போது தேவையோ அப்போது அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பட்டா இல்லாத இடமாங்க.. பிரதமர் வீடு திட்டத்தில் கட்டிய தூய்மை பணியாளர் வீடு இடிப்பு..! ஆக்கிரமிப்பு என ஆக் ஷன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies