தமிழ்நாடு ரெட்டியார் நலச்சங்க மண்டல மாநில மாநாடு
Feb 23, 2026
முகப்பு
சமீப நாட்களாக ஒரு குரங்கு குட்டி கையில் ஆரஞ்சு நிற 'ஒராங்குட்டான்' பொம்மையோடு இருக்கும் உருக்கமான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளபக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
Feb 23, 2026 08:49 AM
29
சமீப நாட்களாக ஒரு குரங்கு குட்டி கையில் ஆரஞ்சு நிற 'ஒராங்குட்டான்' பொம்மையோடு இருக்கும் உருக்கமான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளபக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
சமீப நாட்களாக ஒரு குரங்கு குட்டி கையில் ஆரஞ்சு நிற 'ஒராங்குட்டான்' பொம்மையோடு இருக்கும் உருக்கமான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளபக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
குரங்கு குட்டியின் புகைப்படத்தை பகிர்ந்து "நீங்கள் தனியாக இல்லை, காவல் அவசர எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்" என ஹைதராபாத் போலீசார் விளம்பரம் செய்து வருகின்றனர். மற்றொரு பக்கம் குரங்கு குட்டியின் புகைப்படத்தோடு இந்திய கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் இழந்த உலக கோப்பையை நினைத்து ஏங்குவது போல இப்படி பல்வேறு விதமான எடிட் செய்து பகிர்ந்து வருகின்றனர் வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் காண முடிகிறது.
ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில், 2025 ஜூலை மாதம் பிறந்து, தாயால் கைவிடப்பட்ட இந்த குட்டிக்குரங்கின் பெயர் தான் 'PUNCH'. தாயின் அரவணைப்பிற்காக ஏங்கி தவித்த அந்த குட்டி, தாய்போன்ற குரங்கு பொம்மையை எப்போதும் கட்டியணத்தபடியே தாயை தேடி அலைந்து தவியாய் தவித்துக்கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி, இதயத்தை கலங்க வைத்தது.
இதற்கு முன், பனிபிரதேசத்தில் பென்குவின்கள் கூட்டமாக சென்று கொண்டிருந்தபோது, அதில் ஒற்றை பென்குவின் மட்டும் வேறொரு திசை நோக்கி நடந்து சென்றது. அந்த பென்குவின் இறந்ததாக கூறப்படும் நிலையில், பலரும் அந்த பென்குவினுக்கு இரங்கல் தெரிவித்தும், அதனை வைத்து மீம்ஸ் போட்டும் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்தனர்.
இதனால், இதை இரண்டையும் ஒப்பிட்டு "பழைய பேசண்ட் பென்குவினை டிஸ்சார்ஜ் செய்து, புது பேசண்ட் 'Baby Monkey' ய அட்மிட் பண்ணிருங்க" என கிண்டலடித்து பலரும் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
அன்பிற்காக ஏங்கி வந்த குரங்கு குட்டியை பார்த்து கண்கலங்கிய சிலர், தங்களை ஆறுதல் படுத்திக்கொள்வதற்காக, நிஜத்தில் நடக்கவில்லை என்றால் என்ன? AI மூலமாவது தங்களின் அன்பை தருகிறோம் என சிலர் குட்டி குரங்கை அரவணைப்பது போல AI வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டு வந்தனர்.
உயிரியல் பூங்காவில் இருந்த அந்த குரங்கு குட்டியை அங்கிருந்த மற்ற குரங்குகள் வம்பிழுப்பதும், அதனால் பயந்து அந்த குரங்கு குட்டி ஓடும் வீடியோவும் இணையத்தில் பரவியது.
இதனை பார்த்த தொழிலதிபரும், ஆண்ட்ரூ டேட்டின் சகோதரருமான டிரிஸ்டன் டேட் தனது எக்ஸ் தள பக்கத்தில், "இந்த உயிரியல் பூங்கா எங்கு உள்ளது? நாங்கள் அதை வாங்குகிறோம், 2,50,000 டாலர்ஸ், நான் ஜோக்கிற்காக சொல்லவில்லை" என பதிவிட்டார். இந்த பதிவை பார்த்த பலரும் அவரை பாராட்டி, தயவு செய்து வாங்குங்கள் என கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில், அந்த குரங்கு குட்டியை, மற்றொரு குரங்கு கட்டிப்பிடித்து அரவணைப்பது போல வீடியோ பரவி வருகிறது. இதனை பார்த்து பலரும் நிம்மதி பெரு மூச்சு விட்டு, ஒரு வழியாக இது நடந்துவிட்டதே என நெகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் இன்னும் சிலர் இதுவும் AI வீடியோ போல தான் உள்ளது என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
உலக அளவில் பிரபலமான 'punch'யை காண ஏராளமானோர், அந்த உயிரியல் பூங்காவிற்கு படையெடுத்து சென்று, அதனை வீடியோவாக பகிர்ந்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu