BIG STORIES
பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!
Feb 21, 2026 01:24 AM
11
பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே திமுகவுக்கு எதிரான ஆர்ப்பட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க பெண்பிரமுகரை பேக்கரியில் வைத்து சுற்றிவளைத்த விசிகவினர் , சேரை எடுத்து தாக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை பா.ஜ.க சார்பில் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பலரும் பங்கேற்ற நிலையில், கூட்டத்தில் பேசிய பா.ஜ.கவினர் விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து பேசியதாக கூறி எதிர்ப்பு தெரிவித்த வி.சி.கவினர் பா.ஜ.கவினர் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
சாலையோரம் நடப்பட்ட பாஜக கட்சி கொடிகளை பிடுங்கி எறிந்ததோடு , பாஜகவினர் மீது செருப்பு வீச்சிலும் ஈடுபட்டனர்
இருதரப்பு சாலை மறியல் வரை சென்ற இந்த தாக்குதல் சம்பவம் போலீசாரால் முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அரூரில் உள்ள பேக்கரி கடையில் அமர்ந்திருந்த பாஜகவின் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரஞ்சிதம் என்பவரை மடக்கிய விசிகவினர் கடுமையாக மிரட்டியதாக கூறப்படுகின்றது
விசிக பிரமுகர் கேசவன் என்பவர் , ஆபாசமாக பேசி அந்த பெண்ணை , சேரை தூக்கி தாக்க முயன்ற போது அருகில் நிற்பவர் தடுத்து அனுப்பினார். மற்றொரு விசிக பிரமுகர் அந்த பெண்ணிடம் சாதி பெயரை சொல்லி வாக்குவாதம் செய்தார்.
“பேக்கரியை விட்டு வெளியே வா உன்னை என்ன செய்கிறோம் பார்” ? என்று மிரட்டியபடி விசிகவினர் காத்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புகாரை பெற்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu