150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்
Mar 02, 2026
150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்
Mar 02, 2026
போதையில் சாலை நடுவே சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்
Mar 02, 2026
BIG STORIES
இனி அந்த மாதிரி பேசுவ..? விரட்டி விரட்டி வெளுத்த பெண்கள்.. நடந்தது என்ன ?
Mar 02, 2026 02:05 PM
35
இனி அந்த மாதிரி பேசுவ..? விரட்டி விரட்டி வெளுத்த பெண்கள்.. நடந்தது என்ன ?
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பைக்கில் தனியாக சென்ற பெண்களை பின் தொடர்ந்து ஆபாச வர்ணனை செய்த இரு இளைஞர்களை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்து இரு பெண்களும் சேர்ந்து அந்த இளைஞர்களை வெளுத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
சிதம்பரம் அருகே உள்ள மாரியப்பா நகரில் வசித்து வருபவர் ஆர்த்தி (34). இவர் தனது தோழியான பைமியா என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது பைக்கில் வந்த இரு இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து சென்று ஆபாசமாக வர்ணித்து திட்டி இழிவு படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த இரு பெண்களும், தங்களை ஆபாசமாக பேசி இழிவுபடுத்திய இளைஞர்களுக்கு பதிலடி கொடுக்க பைக்கில் விரட்டி சென்று உள்ளனர்.
பல தெருக்களில் புகுந்து தப்பிக்க நினைத்த இளைஞர்கள் அங்குள்ள கோவில் ஒன்றின் அருகே பைக் சறுக்கியதால் இருவரும் கீழே விழுந்தனர். விரட்டி வந்த பெண்கள் அந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்து இனி இப்படி பேசுவியா ? என்று கேட்டு கன்னம் பழுக்க அடி வெளுக்க ஆரம்பித்தனர்
பேசியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் , ஒன்றும் தெரியாதது போல முகபாவனை காண்பித்த அந்த இளைஞர் ஒரு கட்டத்தில், அவமானமாக இருப்பதாக கூறி முகத்தை மூடினாலும், அவரை விடாமல் தாக்கியதோடு, அதனை வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்த ஆர்த்தி, சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஆர்த்தி அளித்த புகாரின் பேரில் போலீசார் பைக்கில் வந்த அந்த இரு இளைஞர்கள் மீதும் இரு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அந்த இளைஞர்களை தாக்கிய வீயோவையும் அதற்கு விளக்கம் அளித்த வீடியோவையும் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்த நிலையில் சட்டத்தை கையில் எடுக்கலாமா ? என்று ஆர்த்தியை கண்டித்து சிலர் கமெண்ட் செய்திருந்தனர். அதற்கு ஆர்த்தி இதனை எதிர் கொள்ள தான் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu