குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
அமெரிக்க விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்
Mar 02, 2026 01:18 PM
106
அமெரிக்க விமானங்களை தவறுதலாக சுட்டு வீழ்த்திய குவைத்
உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடான குவைத் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை வீசி 3வது நாளாக ஈரான் தாக்குதல் நடத்தியது.
குவைத் வான் பரப்பில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க தயாரிப்பான எப்15 போர் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த விமானி பாராசூட் உதவியுடன் தப்பியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஈரானை தாக்க புறப்பட்ட தங்களின் 3 எப்15 போர் விமானங்களை குவைத் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் போர் விமானங்கள் தங்கள் எல்லைக்குள் வந்துவிட்டதாக கருதி தவறுதலாக குவைத் தாக்கி விட்டதாகவும், விமானிகள் 6 பேரும் பாதுகாப்பாக வெளியேறி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஈரான் ஏவிய பல டிரோன்களை இடைமறித்து தாக்கி அழித்ததாகவும் குவைத் அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அங்கிருந்து கரும்புகை வெளிவந்தது. ஈரான் தாக்குதல் காரணமாக குவைத்தில் பல இடங்களில் சைரன் சத்தம் கேட்டவாறு இருந்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu