RECENT NEWS

34 குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை

34 குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை

Mar 07, 2026

34 குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை

34 குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை

Mar 07, 2026

BIG STORIES

ரவுடிகளை வைத்து அரசியல் விசிக மாவட்ட செயலாளரை அடிக்கப் பாய்ந்த நிர்வாகி..! திருமா கார் முன் பிரச்சனை ஆரம்பம்

Mar 01, 2026 06:39 AM

169

ரவுடிகளை வைத்து அரசியல் விசிக மாவட்ட செயலாளரை அடிக்கப் பாய்ந்த  நிர்வாகி..! திருமா கார் முன் பிரச்சனை ஆரம்பம்

ரவுடிகளை வைத்து அரசியல் விசிக மாவட்ட செயலாளரை அடிக்கப் பாய்ந்த நிர்வாகி..!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் திண்டுக்கல்லுக்கு வருகை தந்த நிலையில், தகவல் சொல்லவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் இரு தரப்பாக பிரிந்து கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் நிர்வாகிகள் இரு பிரிவாக பிரிந்து கடும் வார்த்தை போரில் ஈடுபட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தென்காசியில் கட்சி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு மதுரை வழியாக ஈரோடு சென்றார். இதை அடுத்து திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த அவரது காரை நிறுத்த செய்து, மாவட்ட செயலாளர் மைதீன் பாவா என்பவர் திண்டுக்கல் தோமையார்புரம் பகுதிக்கு அழைத்துச்சென்று வரவேற்பு அளித்தார்

தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகளையும் செய்தியாளர்களையும் சந்தித்த திருமாவளவன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கார் புறப்படுவதற்கு முன்னதாகவே, வத்தலகுண்டுவை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகி உலகநம்பி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என கூறி மாவட்டச் செயலாளர் மைதீன் பாவாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

“இது கட்சி நிகழ்ச்சி அல்ல தலைவர் ஈரோடு செல்கிறார் எதிர்பாராத வரவேற்பு நிகழ்ச்சி” என்று மாவட்ட செயலாளர் மைதீன் பாவா தெரிவித்தார். அங்கிருந்த மைதீன் பாபாவின் ஆதரவாளர்கள் எதிர்த்தரப்பை சேர்ந்த வத்தலகுண்டு விசிக நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து ரவுடிகளை வைத்து அரசியல் செய்கிறாயா? என மாவட்ட செயலாளர் மைதீன் பாவாவை கேள்விகளால் வெளுத்ததோடு, எதிர் தரப்பினர் கடும் வார்த்தை போரில் ஈடுபட்டதால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதை அடுத்து மற்ற நிர்வாகிகள் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies