தமிழ்நாடு
போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு என தகவல்
Mar 01, 2026 04:33 AM
25
போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு என தகவல்
அரியலூர் மாவட்டம் தா.பழூரில் போலீஸார் தாக்கியதால் மனமுடைந்து உயிர் நீத்ததாக கூறப்படும் இளைஞரின் உடலை அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்குள் வைத்து போராட்டம் நடத்தினர்.
சுத்தமல்லி பிரிவு சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அங்கு டூவீலரில் வந்த இடங்கண்ணியைச் சேர்ந்த செல்வகுமாரிடம் சோதனை நடத்தியதில் அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக வாக்குவாதம் செய்த செல்வகுமாரை காவலர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டிற்கு வந்து தற்கொலை செய்துக் கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனால் செல்வகுமாரை தற்கொலைக்கு தூண்டிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் நிலையத்திற்குள் சடலத்தை வைத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu