தமிழ்நாடு
முந்திரி பருப்பு சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..! பெற்றோர்களே தெரிஞ்சுக்கோங்க!
Mar 02, 2026 06:39 AM
33
முந்திரி பருப்பு சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..! பெற்றோர்களே தெரிஞ்சுக்கோங்க!
முந்திரி பருப்பு சாப்பிட்ட 2 வயது குழந்தை உயிரிழப்பு..! அதிர்ச்சி ரிப்போர்ட்..! பெற்றோர்களே தெரிஞ்சுக்கோங்க!
சென்னை, எம்.ஜி.ஆர். நகர், மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்தவர்கள் சிவக்குமார் - அருணா தம்பதியர்.
இவர்களின் இரண்டு வயது பெண் குழந்தையான ஹரிவர்தினி, முந்திரி பருப்பு சாப்பிட்டு கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென குழந்தை மயங்கி விழுந்த நிலையில், துடிதுடித்து போன பெற்றோர், வீட்டின் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, குழந்தையின் உடல் கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தாய் அருணா அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த எம்ஜிஆர் நகர் போலீசார்...,
உயிரிழந்த 2 வயது குழந்தை ஹரிவர்த்திணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, முந்திரி சாப்பிடும்போது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனாலும், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தபிறகே, குழந்தை இறப்புக்கான முழுமையான காரணம் தெரிய வரும் என போலீசார் தகவல் தெரிவித்தனர்.
இந்தநிலையில், முந்திரி பருப்பு சாப்பிட்ட குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது ஏன்? உயிரிழந்தது எப்படி?
பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக முந்திரி பருப்பை கொடுப்பது எப்படி? என குழந்தைகள் நல மருத்துவர் மணிமேகலையிடம் கேட்டபோது...,
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எவ்வாறு உணவை கொடுக்க வேண்டும்?
சுவாச குழாயில் அடைப்பு காரணமாக திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டால், எப்படி முதலுதவி செய்து காப்பாற்றவேண்டும் என என்ற விளக்கம் அளித்தார்.
குறிப்பாக, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முந்திரி பருப்பு மட்டுமல்ல, எந்த பருப்பாக இருந்தாலும்...
அரைத்தோ, பேஸ்ட்டாகவோ கொடுப்பதுதான் பாதுகாப்பானது. முழுமையாக கொடுத்தால், இப்படிப்பட்ட ஆபத்துகள் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்.
அதேநேரம், பருப்பு வகைகளை சாப்பிட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, குழந்தைகள் போராடிக்கொண்டிருந்தால், அதற்கான முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி எனவும் கூறினார்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu