150 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்
Mar 02, 2026
போதையில் சாலை நடுவே சண்டையிட்ட கல்லூரி மாணவர்கள்
Mar 02, 2026
முகப்பு
ஈரானின் படை பலத்தை அழிக்கும் வரை தாக்குதல் - அமெரிக்கா
Mar 02, 2026 03:51 PM
25
ஈரானின் படை பலத்தை அழிக்கும் வரை தாக்குதல் - அமெரிக்கா
ஈரானின் முப்படைகளையும் அழிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானுக்கு எதிரான போர் திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்றார்.
போர் நடத்தும் சூழலுக்கு அமெரிக்காவை தள்ள வேண்டாமென ஏற்கனவே அறிவுறுத்தியதாகவும், அமெரிக்க அதிபரின் அறிவுறுத்தலை ஏற்காமல் செயல்பட்டதால் ஈரானுக்கு எதிராக தற்போது தாக்குதல் நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
ஈரானின் ஏவுகணை தயாரிப்பு, டிரோன் தயாரிப்பு, கடற்படை உள்ளிட்டவற்றை அழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இனி ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவே முடியாத அளவுக்கு தாக்குதல் நடைபெறுகிறது என்ற அவர், ஈரான் மீது துல்லியமான தாக்குதலால், நாளுக்கு நாள் அமெரிக்கா வலிமை அடைந்து வருவதாகவும், ஈரான் வலிமை குன்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இனி, ஈரானில் மக்கள் தங்கள் ஆட்சியாளர்களை தீர்மானிக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளதாக பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu