RECENT NEWS

கழிப்பறைக்குள் மிளகாய் பொடியை தூவி 6.5 சவரன் நகை கொள்ளை

கழிப்பறைக்குள் மிளகாய் பொடியை தூவி 6.5 சவரன் நகை கொள்ளை

Mar 06, 2026

கழிப்பறைக்குள் மிளகாய் பொடியை தூவி 6.5 சவரன் நகை கொள்ளை

கழிப்பறைக்குள் மிளகாய் பொடியை தூவி 6.5 சவரன் நகை கொள்ளை

Mar 06, 2026

தமிழ்நாடு

போதை ஆசாமிகள் அட்டூழியம் கல்லூரி பேருந்து மீது தாக்குதல் அலறித்துடித்த மாணவிகள்..! மதுரையில் நடந்தது என்ன ?

Mar 06, 2026 04:26 AM

30

போதை ஆசாமிகள் அட்டூழியம் கல்லூரி பேருந்து மீது தாக்குதல் அலறித்துடித்த மாணவிகள்..! மதுரையில் நடந்தது என்ன ?

போதை ஆசாமிகள் அட்டூழியம் கல்லூரி பேருந்து மீது தாக்குதல் அலறித்துடித்த மாணவிகள்..! மதுரையில் நடந்தது என்ன ?

மாணவிகள் சென்ற கல்லூரி பேருந்துக்குள் நுழைந்து போதை ஆசாமி ஓட்டுனரை தாக்கியதால் மாணவிகள் அஞ்சி அலறும் காட்சிகள் தான் இவை..

மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து மாணவர்கள் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாணாக்கர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து பெருங்குடி, வலையப்பட்டி, பெரிய ஆலங்குளம் விரிசல் குளம் சென்று கொண்டிருந்தது அப்போது ஓ ஆலங்குளம் கிராமம் சாலையில் இறுதி ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது கல்லூரி பேருந்து ஓரமாக ஒதுங்காமல் சாலையை கடக்க முற்பட்டதாகவும் சத்தமாக ஒலி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் மது போதையில் இருந்த சிலர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

பேருந்தின் கதவுகளை உடைத்துக் கொண்டு பேருந்துக்குள் ஏறிய போதை ஆசாமி ஒருவர் ஓட்டுநரை தாக்கியதால் இதனை பார்த்து பேருந்துக்குள் இருந்த மாணவிகள் அலறினர்.  

இதனை படம்பிடித்த மாணவி ஒருவர் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

போதை ஆசாமிகள் தான் தறி கெட்டு நடந்து கொண்டர்கள் என்றால் , புத்தி சொல்ல வேண்டிய பெரியவர்களோ, தங்களுடன் வந்தவர்கள் யாரும் ஓட்டுனரை தாக்கவில்லை என்றும், பேருந்தின் கதவு பூட்டியே இருந்ததாகவும் கூறி சமாளித்தனர்

இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை ஆசாமிகள் அட்டூழியம் கல்லூரி பேருந்து மீது தாக்குதல் அலறித்துடித்த மாணவிகள்..! மதுரையில் நடந்தது என்ன ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies