RECENT NEWS

தஞ்சையில் இன்று விஜய் பங்கேற்கும் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்

தஞ்சையில் இன்று விஜய் பங்கேற்கும் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்

Mar 04, 2026

தஞ்சையில் இன்று விஜய் பங்கேற்கும் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்

தஞ்சையில் இன்று விஜய் பங்கேற்கும் த.வெ.க. நிர்வாகிகள் கூட்டம்

Mar 04, 2026

BIG STORIES

சுப்பம்மா சுப்பம்மா… சூலூரு சுப்பம்மா… தப்பம்மா தப்பம்மா... செய்யுறது தப்பம்மா... பிறர்மனை நோக்கர்களின் ‘மரண’ பயங்கரம்!

Mar 04, 2026 01:43 AM

18

சுப்பம்மா சுப்பம்மா… சூலூரு சுப்பம்மா… தப்பம்மா தப்பம்மா... செய்யுறது தப்பம்மா... பிறர்மனை நோக்கர்களின் ‘மரண’ பயங்கரம்!

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே, நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 37 வயது பெண். இவரது, கணவர் மற்றும் குடும்பத்தினர் துபாயில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

இவருக்கு, ஏற்கனவே திருமணம் ஆகி அவரது மனைவி இறந்ததால், மற்றொரு பெண்ணுடன் திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்திவரும் 52 வயது பிரேம் ஆனந்த் என்பவருடன் திருமணத்தைத் தாண்டிய நட்பு இருந்ததாக கூறப்படுகிறது.

லாரி மற்றும் ஆட்டோ என வெவ்வேறு வாகனங்களை ஓட்டும் பிரேம் ஆனந்த் நாகமநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில், அப்பெண்ணிற்கு தேவையான மளிகை பொருட்கள், வீட்டிற்கு தேவையான செலவுகள் என கவனித்துவந்துள்ளார்.

இந்தநிலையில், அப்பெண் பகுதி நேரமாக தனியார் உணவகத்தில் காய்கறி வெட்டிக்கொடுக்கும் வேலைக்கு சேர்ந்துள்ளார். அந்த உணவகத்தை திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த திலீபன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த திலீபனுக்கு திருமணம் ஆகி மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டதால், தனது தாய் தந்தையுடன் பட்டணத்தில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், உணவகத்தில் உணவு தயாரிக்க அடுப்பில் தீ பற்றவைத்தார்களோ இல்லையோ, புதிதாக வேலைக்குச் சேர்ந்த அப்பெண்ணிற்கும் திலீபனுக்கும் காதல் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது.

இந்தநிலையில், பிரேம் ஆனந்துடன் அப்பெண் பேசுவதை தவிர்த்ததால், அவருக்கு சந்தேக தீ பற்றிக்கொண்டது. இதனால், அப்பெண்ணை, உணவகத்துக்கு வேலைக்கு செல்லவேண்டாம் என பிரேம் ஆனந்த் தடுத்துள்ளார். ஆனால், தொடர்ந்து வேலைக்கு செல்வேன் என அப்பெண் உணவகத்துக்கு வேலைக்கு செல்வதோடு, திலீபனுடனான நட்பை தொடர்ந்து வந்துள்ளார்.

இதனால், இரண்டு பிறர்மனை நோக்க பிரியர்களுக்குள்ளும் பிரச்சனை ஏற்பட ஆரம்பித்தது. அது, இருவருக்குள்ளும் வன்ம தீயை பற்றவைத்து, எரிமலையாய் வெடிக்கவைத்தது.

தாலி கட்டிய சொந்த புருஷர்கூட இவ்வளவு ஆவேசப்பட்டிருக்கமாட்டார். வெகுண்டெழுந்த பிரேம் ஆனந்த், அந்த உணவகத்துக்கே சென்று, “நீ இனிமே இங்க வேலைக்கு வரக்கூடாது” ஆக்ரோஷமாக சண்டையிட்டுள்ளார்.

மேலும், அப்பெண் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்த கத்தியை பிடுங்கி, அந்த பெண்ணையே கொலைவெறியோடு குத்த முயற்சித்துள்ளார். அப்போது, ஓடிவந்து தடுத்த உணவக உரிமையாளர் திலீபன் கையில் வெட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக, 2026 ஜனவரி 5 ஆம் தேதி, பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனிலில் வெளியே வந்த பிரேம் ஆனந்த், அப்பெண்ணுடன் தனது நட்பை மீண்டும் புதுப்பித்துக்கொள்ள முயற்சித்துள்ளார். அப்பெண்ணும் பயத்தில் வேறு வழியில்லாமல், பேசிவந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மார்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தூங்கிக்கொண்டிருக்கும்போது பிரேம் ஆனந்த் வீட்டில் கரண்ட் கட் ஆனதால், அருகிலுள்ள அப்பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது, அப்பெண்ணும் உணவக உரிமையாளர் திலீபனும் ஒரே வீட்டில் இருந்ததைப்பார்த்து, ஆத்திரமடைந்த பிரேம் ஆனந்த், கத்தியால் திலீபனின் கழுத்தை அறுத்ததாகக் கூறப்படுகிறது. இதில், ரத்தவெள்ளத்தில் துடி துடித்து சரிந்த திலீபன், அந்த இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதோடு, வஞ்சம் தீராத பிரேம் ஆனந்த், அடுத்து செய்ததுதான் குரோத மனநிலையின் உச்சம். அக்கம் பக்கத்தில் பலரது வீடுகள் இருக்கிறதே? குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், ஆண்கள் என அவர்களது உயிருக்கும் ஆபத்து ஏற்படுமே என யோசிக்காத, பிறர் மனை வெறியராக மாறிய பிரேம் ஆனந்த், அந்த வீட்டிலுள்ள கேஸ் சிலிண்டரின் ட்யூபை பிடுங்கிவிட்டு, அறை முழுவதும் கேஸ்ஸை கசியவிட்டு தீப்பற்றவைத்துள்ளார். எரிவாயு சிலிண்டரின் தீ ஜன்னல்களை உடைத்துக்கொண்டு வெளியேற, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்துள்ளனர்.

இதுகுறித்து, கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் எம். பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸார், லேசான தீக்காயங்களுடன் இருந்த அப்பெண்ணையும் பிரேம் ஆனந்தையும் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு, 52 வயதிலும் ஆசை அடங்காத பிறர் மனை வெறியர் பிரேம் ஆனந்த்தை அதிரடியாக கைது செய்தனர்.

ஏற்கனவே திருமணமான ஒரு பெண்ணிற்காக, ஏற்கனவே திருமணமான இரண்டு ஆண்கள் போட்டிப்போட்டுக்கொண்டதால், கொலையில் முடிந்த சம்பவம், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சுப்பம்மா சுப்பம்மா… சூலூரு சுப்பம்மா… தப்பம்மா தப்பம்மா... செய்யுறது தப்பம்மா... பிறர்மனை நோக்கர்களின் ‘மரண’ பயங்கரம்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies