தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
BIG STORIES
‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்
Mar 05, 2026 09:12 AM
23
‘தேவியின் திருவிளையாடல்’... கொலை வழக்கில் சிக்கிய வடக்கு தொழிலாளி மீண்டது எப்படி ? காதல் மிக்சானதால் விபரீதம்
திருவள்ளூரில் மிக்சர்கடை உரிமையாளரை கொலை செய்ததாக கடையில் வேலை பார்த்த வட மாநில தொழிலாளர் ஒருவரை போலீசார் பிடித்துச்சென்ற நிலையில், திடீர் திருப்பமாக கடையில் பணிபுரிந்த பெண்ணின் கணவன் மற்றும் மகனை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மாகரல் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பன்(50). மொத்தமாக மிக்சர் தயாரித்து அதனை பாக்கெட் செய்து பல்வேறு கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பும் சுய தொழிலை, தனது சொந்த கட்டிடத்தில் நடத்தி வந்த சின்னப்பனிடம் ஒரு பெண்ணும் . வட மா நில தொழிலாளர் ஒருவரும் வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று இரவு கடையில் படுத்து உறங்கிய சின்னப்பன் மறு நாள் காலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததாகவும், அங்கு வேலைபார்த்து வந்த வட மாநில தொழிலாளியான பஞ்சானன் என்பவர் கடைக்குள் இருந்து ஓடுவதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர்.
இதனை பார்த்து தப்பி ஓடிய பஞ்சானன் தான் கொலை செய்து விட்டு ஓடுவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து , அக்கம்பக்கத்தினர் தெரிவித்த தகவலின் பேரில், கடையில் இருந்து தப்பி ஓடிய வட மாநில தொழிலாளி பஞ்சானனை பிடித்து விசாரித்தனர். அவருக்கு தமிழ் தெரியவில்லை , போலீசாருக்கு இந்தி தெரியவில்லை ஒரு கட்டத்தில் அவர் தான் சின்னப்பனை கொலை செய்தவர் என்று கருதி, அவரை கைது செய்வதற்கு தேவையான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டதக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், திடீர் திருப்பமாக அந்த கடையில் பணிபுரிந்த தேவி என்பவருக்கும், கொல்லப்பட்ட சின்னப்பனுக்கும் பழக்க வழக்கம் இருந்ததாகவும், இதனை தேவியின் கணவர் கண்டித்ததால் இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தேவியின் கணவர் சுபாஷ்சை பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.மிக்சர் கடை உரிமையாளர் அவரது மனைவி குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு விட்டு இங்கு தங்கி கடை நடத்திவருவதாகவும், அந்த கடைக்கு வேலைக்கு சென்ற தனது மனைவி தேவியுடன் அவர் திருமணம் கடந்த உறவில் இருந்ததால் பலமுறை கண்டித்ததாக கூறப்படுகின்றது. சின்னப்பன் கேட்காமல் அதனை தொடர்ந்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சம்பவத்தன்று இரவு தனது மகன் சக்திவேலுவுடன் சென்று சின்னப்பனை கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்ததாக சுபாஷ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தந்தை மகனை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் இந்த கொலை சம்பவத்தில் தேவி உடந்தையாக இருந்தாரா ? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்பட்ட வட மாநில தொழிலாளி பஞ்சானன் விடுவிக்கப்பட்டார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu