RECENT NEWS

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

முகப்பு

தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

Mar 06, 2026 03:45 PM

28

தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டு வளர்ச்சிக்கான 14 அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், "உங்கள் கனவ சொல்லுங்க" திட்டத்தின் நிறைவாக "கனவுகள் மெய்படும்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், 2030-ஆம் ஆண்டிற்குள் கிராமப்புறங்களில், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின்கீழ் 5 லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

கடல் கூண்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்து உற்பத்தியை 400 டன்னாக உயர்த்தப்படும் என்றும், கடல்பாசி சாகுபடியை 30 ஆயிரம் டன்னாக அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது தினசரி 3 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யும் தமிழ்நாட்டை, 2030-க்குள் 4.50 கோடி லிட்டராக உயர்த்தும் இலக்கோடு செயலாற்றப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies