தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது
Mar 09, 2026
BIG STORIES
திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
Mar 09, 2026 06:59 AM
34
திருப்பி அடித்த திரிஷா..பார்த்திபன் கனவில் கல்..பிளாஸ்ட்.. பிளாஸ்ட்.. பிளாஸ்ட்..குந்தவைக்கு கோவம் வந்திருச்சு.
குந்தவை, வீட்டில் குந்த வைக்கப்படுவதே நல்லது என்று நடிகை திரிஷா குறித்து பார்த்திபன் தெரிவித்த கருத்திற்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், பார்த்திபன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மீது அவரது மனைவி சங்கீதா பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில் விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது பேசு பொருளானது.
விஜயின் இந்த நடவடிக்கை அவரது ரசிகர்களை நொந்து கொள்ளச் செய்ததாக இயக்குனர் சமுத்திரக்கனி பேசிய வீடியோ ஒன்றும் வைரலானது
இந்நிலையில் சென்னையில் நடந்த youtube நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் திரையில் தோன்றிய நடிகை திரிஷாவின் புகைப்படத்திற்கு உடனடியாக கமெண்ட் சொல்வதாக கூறி, பிரச்சனைகள் வராமல் இருக்க குந்தவை வீட்டில் குந்த வைக்கப்படுவது சரியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பார்த்திபனின் இந்த கருத்துக்கு நடிகை திரிஷா கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார். பார்த்திபனின் பெயரைக் குறிப்பிடாமல் இது அநாகரிகமான பேச்சு என்று சாடி இருந்தார்.
சமூக வலைதளங்களில் ஏராளமானோர் திரிஷா குறித்து பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வந்தாலும் அது குறித்து எல்லாம் வாய் திறக்காத, கருத்து தெரிவிக்காத திரிஷா, பார்த்திபனுக்கு எதிராக பிளாஸ்ட் ஆக வெடித்து கருத்து தெரிவித்திருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
இதையடுத்து திரிஷா குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு நடிகர் பார்த்திபன் வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்டு இருந்தார்...
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான், அவனவன் யார் யாரையோ ஜோடியாக கூட்டிட்டு வாரான் என்று விஜய் திரிஷா ஜோடியை பெயர் குறிப்பிடாமல் கலாய்த்தார்
கடந்த காலங்களில் நடிகை திரிஷா குறித்து விமர்சனம் செய்துவிட்டு, மன்சூர் அலிகான், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu