தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது
Mar 12, 2026
முகப்பு
திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - அன்புமணி
Mar 12, 2026 05:34 AM
18
திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - அன்புமணி
தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை - அன்புமணி
பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு, அவர் வசிக்கும் கிராமத்திலேயே பாதுகாப்பு இல்லை - அன்புமணி
"மாணவிக்கு அவரது கிராமத்திலேயே பாதுகாப்பு இல்லாதது தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை காட்டுகிறது"
"தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு மெத்தனம்"
உயர்கல்வி, எதிர்காலக் கனவுகளுடன் இருந்த ஒரு மாணவியின் வாழ்வு கயவர்களால் சிதைக்கப்பட்டுள்ளது - அன்புமணி
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சுற்றி அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரைக் கொண்ட ஒரு கூட்டம் உள்ளது"
"நமது அரசு சாதனை மேல் சாதனைகளை படைப்பதாக மந்திரங்கள் மட்டும் தான் முதல்வரின் காதுகளில் ஓதப்படும்"
"முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு மாய உலகில் வாழ்கிறார், அமைச்சர்கள் உண்மை நிலையை அவரிடம் மறைக்கின்றனர்"
தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை - அன்புமணி
மாணவர்களின் கனவுகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றப் போவதாக முதலமைச்சர் நாடகம் - அன்புமணி
உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் அரசு அல்ல - அன்புமணி
"தமிழ்நாட்டில் நடப்பது மாணவ, மாணவிகளின் கனவுகளை சிதைக்கும் கொடிய கயவர்களைக் காப்பாற்றும் அரசு"
கடந்த ஐந்தாண்டுகளில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 129% அதிகரிப்பு - அன்புமணி
"இதுவரை 39 பெண் குழந்தைகள் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்"
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்குத் ஆழ்ந்த இரங்கல், திமுக அரசு உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் - அன்புமணி
பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய திமுக அரசுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் - அன்புமணி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu