குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
BIG STORIES
இந்தியாவுக்கு 30 நாட்கள் அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..! பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
Mar 07, 2026 06:42 AM
34
இந்தியாவுக்கு 30 நாட்கள் அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..! பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
கடந்த மாதம் 28 ஆம் தேதியன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலை நடத்தியது. இதனால் போராக மாறியது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு தரத் தயார் என அமெரிக்கா கூறிய நிலையில், ஏவுகணை கொண்டு தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்தப் போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நாடுகளில் வரும் நாட்களில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. இந்தியா தொடர்ந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கியது. இது உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவை ஊக்குவிப்பதாக இருக்கும் என்று இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூடுதல் வரி விதித்தார் .
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் இந்தியாவுக்கான வரியை 18 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது. இதையடுத்து கடந்த சில வாரங்களாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்தது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கச்சா எண்ணெய் வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டால், அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரியை மீண்டும் விதிக்கும் எனவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிலையில் தான் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க, இந்தியாவிற்கு 30 நாட்கள் அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது .
இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், “அதிபர் டிரம்பின் எரிசக்தி நிகழ்ச்சி நிரலின் விளைவாக எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த மட்டங்களை எட்டியுள்ளது.
உலக சந்தையில் எண்ணெய் வரத்து தொடர்வதை உறுதி செய்வதற்காக, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு அனுமதி அளிக்கும் விதமாக, கருவூலத் துறை தற்காலிகமாக 30 நாள் விலக்கு அளிக்கிறது. இந்த குறுகிய கால நடவடிக்கை, ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது. ஏனெனில், இது ஏற்கனவே கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது என பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய ரஷ்யா எப்போதும் தயார் என்று இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu