முகப்பு
நடிகை ராஷ்மிகா இப்படியா ? லீக் ஆன பர்சனல் ஆடியோ “இனியும் காத்திருக்கமாட்டேன்” 24 மணிநேரத்தில் ஆவேச முடிவு
Mar 14, 2026 01:24 AM
28
நடிகை ராஷ்மிகா இப்படியா ? லீக் ஆன பர்சனல் ஆடியோ “இனியும் காத்திருக்கமாட்டேன்” 24 மணிநேரத்தில் ஆவேச முடிவு
நடிகை ராஷ்மிகா இப்படியா ? லீக் ஆன பர்சனல் ஆடியோ “இனியும் காத்திருக்கமாட்டேன்” 24 மணிநேரத்தில் ஆவேச முடிவு
கன்னடப் படமான 'கிரிக் பார்ட்டி' மூலம் கியூட்டான கல்லூரி மாணவி ‘சான்வி’யாக எண்ட்ரி ஆன, குடகு அழகி ராஷ்மிகா மந்தனா, இன்று இந்தியாவின் 'நேஷனல் கிரஷ்'ஷாக உச்சத்தில் உள்ளார். ஆனால், இந்த உச்சத்தை அவர் எளிதாக அடைந்துவிடவில்லை. ஒவ்வொரு கட்டத்திலும் விமர்சனங்கள், ட்ரோல்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்களை எதிர்கொண்டே, இந்தியாவின் நம்பர் 1 நடிகையாக வளர்ந்துள்ளார்.
பல வருட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2026 பிப்ரவரி 26 அன்று ராஷ்மிகாவும், டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டாவும் திருமணம் செய்துகொண்டனர். 'கீதா கோவிந்தம்' ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடங்கிய இவர்களது காதல், இப்போது திருமண பந்தத்தில் இணைத்துள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கையின் சர்ச்சைகளைத் தாண்டி, திரையுலக வாழ்க்கையில் எப்படி உச்சத்தை அடைய முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில்தான், ராஷ்மிகாவுக்கு திருமணம் ஆனதில் இருந்தே, அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் அதிகமாக பகிரபட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் ராஷ்மிகா மந்தனாவின் தாயார் பேசியதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ உரையாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் ராஷ்மிகா மற்றும் நடிகர் ரக்சித் ஷெட்டி ஆகியோரின் முறிந்த நிச்சயதார்த்தம் குறித்தும், ரக்சித் குடும்பத்தினர் ராஷ்மிகாவை சினிமாவில் இருந்து விலகச் சொன்னது குறித்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில்தான், ராஷ்மிகா தனது திருமண வாழ்வை சீர்குலைக்கும் வகையில் இப்படி அவதூறு பரப்பப்படுகிறது என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில்தான், தனிப்பட்ட உரையாடல்களின் சிறு பகுதி நீக்கப்பட்டு தவறான நோக்கத்தில் பரப்பப்படுவதாக ராஷ்மிகா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவது, டார்கெட் செய்து பழிவாங்குவது போன்ற செயல்களை செய்யத் தொடங்கி 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. வியூஸூக்காகவும், ரீச்சுக்காகவும், என்கேஜ்மென்டுக்காகவும், நான் சொல்லாத வார்த்தைகளும், தவறான தகவல்களும், வெறுப்பும் பரப்படுவதை நான் கவனித்திருக்கிறேன். இவை அனைத்தும் எனக்கு வேதனையையும், காயத்தையும் ஏற்படுத்தினாலும், நான் தொடர்ந்து பொறுமையாகவும், அமைதியாகவும் இருந்தேன். பொது பார்வையில் இருப்பது சில நேரங்களில் நியாயமற்ற விமர்சனங்களையும் நான் ஏற்றுக்கொண்டேன்.
ஆனாலும், எனக்கு நான் உண்மையாக இருந்து, அன்பையும், மகிழ்ச்சியையும் என்னை சுற்றி இருப்பவர்களுக்கு கடத்தி வந்தேன். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் எல்லை மீறப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக நம்பப்படும் பழைய, தனிப்பட்ட உரையாடல்களை சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இல்லாமல் பரப்பி வருகிறார்கள்.
எட்டு வருடங்களுக்கு முன்பு எடுத்த தனிப்பட்ட உரையாடல் அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்டு பரப்பப்பட்டிருக்கிறது. இன்று, மற்றவர்கள் இதில் இழுக்கப்படும்போது இனி மவுனமாக இருக்க முடியாது. திருமணத்திற்குப் பிறகு எனது புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற செயல்கள் தேவையற்றவை. என்னை விமர்சிப்பதோடு நில்லாமல், என் குடும்பத்தினரையும் இதில் இழுத்துத் தவறாகப் பேசுவதை ஏற்க முடியாது. அந்த ஆடியோவில் ஒரு சிறிய பகுதி வேண்டுமென்றே நீக்கப்பட்டு, சங்கடமான சர்ச்சையை உருவாக்கியுள்ளார்கள்.
இது முழுக்க முழுக்க ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல். தவறான தகவல்களையும், அவதூறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள். வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி, வளர்ச்சியை நோக்கி நேர்மறையைப் பரப்பும் அதே வேளையில், ஒரு சிலர் மற்றொரு நபரின் கண்ணியத்தையும் அமைதியையும் விலையாகக் கொடுத்து வெறுப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது.
அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கும் ஊடகங்களும், இன்ஃப்ளுயன்சர்களும் உடனடியாக நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அப்படி நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஷ்மிகா பதிவிட்டிருக்கிறார். மேலும் 8 ஆண்டுகளாக இந்த தாக்குதல் என் மீது மட்டும் இருந்தபோது அமைதி காத்தேன். ஆனால் இன்று அது மற்றவர்களையும் பாதிக்கும்போது, நான் அமைதியாக இருக்க முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு. 24 மணி நேரத்தில் என்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களையும் ஊடகத்தினர், தனிநபர்கள், இன்ஃபுளூயன்ஸர்கள் அனைவரும் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
ராஷ்மிகா 24 மணிநேரத்தில் எடுக்கும் முடிவு லீக் ஆன பர்சனல் ஆடியோ; நடந்தது என்ன?
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu