5 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்
Mar 14, 2026
BIG STORIES
என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை
Mar 14, 2026 02:31 AM
12
என் ஜாய்... எஞ்சாமீன்னுட்டு ஏன் சாமி சண்டை போடுறீங்க ?ச.நா. - அறிவு பங்கு பிரிக்கலையாம்..! 5 வருடமாக ஓயாத ராயல்டி சண்டை
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் பாடகர்கள் அறிவு, தீ ஆகியோர் பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் கொரோனா காலத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மாஜா யூட்யூப் தளத்தில் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது.
இந்நிலையில் பாடலின் முக்கியமான கருத்து மற்றும் வரிகளில் பெரும் பங்கு தன்னுடையது எனவும், ஆனால் பாடல் உலகளவில் பிரபலமான பிறகு தனக்கு உரிய அளவு கிரெடிட் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பாடகர் அறிவு குற்றம்சாட்டினார். இதனால் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் அறிவு இடையே விரிசல் ஏற்பட்டது.
இருவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி குற்றச்சாட்டு வைத்து வந்தனர். இந்த பங்கு சண்டை நிகழ்ந்து 5 ஆண்டுகள் கடந்த நிலையில் பாராட்டி பதிவிட்ட ரசிகரால் மீண்டும் கடுத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று ரசிகர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட, மற்றொரு நபர் இந்த பாடலை சந்தோஷ் நாராயணனும் அவரது மகள் தீ-யும் பாடகர் அறிவிடம் இருந்து திருடி விட்டதாக குற்றச்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலடி இசையமைப்பாளர் சநா என்கிற சந்தோஷ் நாராயணன் பதிலட்டி கொடுத்த்தார்.அதில், இந்தப் பாடலின் ஐடியா முதலில் Dhee கிட்டிருந்து வந்தது. பாடலில் உள்ள சில ட்யூன்களையும் அவர் உருவாக்கினார்
பாடலின் முக்கியமான கதை மற்றும் கான்செப்டை இயக்குனர் மணிகண்டன் உருவாக்கியதாக கூறி உள்ளார். அந்த நேரத்தில் அவர் கடைசி விவசாயி படத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும், இந்தப் பாடலின் இசை அமைப்பு, மெலடி உருவாக்கம் மற்றும் தயாரிப்பு பணிகளை முழுவதுமாக சந்தோஷ் நாராயணன் செய்ததாக தெரிவித்துள்ளார்.
பாடலின் பெரும்பாலான வரிகளை எழுதி பாடிய அறிவு சில பாரம்பரிய ஒப்பாரி வரிகளையும் மாற்றி பயன்படுத்தினார் என்றும் “எஞ்சாமி” என்ற வார்த்தையை மட்டும் தான் அறிவு பரிந்துரைத்ததாகவும், அதுபோல தனது பல பாடல்களிலும் சில வார்த்தைகளை அவர் பரிந்துரைப்பது வழக்கமாக இருப்பதாகவும் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்தப் பாடல் ஒரே ஒருவரால் உருவாக்கப்பட்டதல்ல; பலரின் கூட்டு முயற்சியால் உருவானது என்றும், தற்போது டிஜிட்டல் காலம் என்பதால் யார் என்ன செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்கவும் நிரூபிக்கவும் முடியும் என்றும் அவர் கூறி இருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பாடகர் அறிவு, இங்கே கிரெடிட், உரிமை மற்றும் சம்பளம் தொடர்பான தனது நிலைப்பாடு ஏற்கனவே பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தை தனிப்பட்ட முறையில் தீர்க்க பலமுறை முயற்சி செய்ததாகவும் , அதற்காக வீட்டிற்கே சென்று பேச முயன்றதாகவும், ஆனால் அந்த முயற்சிகள் எந்த முடிவுக்கும் வரவில்லை என்றும் அறிவு குறிப்பிட்டுள்ளார்.
இது சமூக ஊடகங்களில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல என்றும், உண்மைகள் தானாகவே வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான சரியான நடைமுறைகள் மற்றும் தளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் இதை தீர்க்க முடியும் என்றும் அறிவு தெரிவித்துள்ளார்.
பாடகர் அறிவின் இந்த பதிவிற்கு மீண்டும் விளக்கமளித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்,
இது சமூக ஊடகங்களில் பேச வேண்டிய விஷயமாக இருக்கக் கூடாது என்றும், ஆனால் வெளிப்படையான பொய்களால் இதை சமூக ஊடக விவாதமாக மாற்றிவிட்டதாகவும் மற்றொரு தரப்பு குற்றம்சாட்டுகிறது. “இதைக் குறித்து தீர்வு காண முயன்றேன்” என்று கூறுவது ஒரு பொய்யான கட்டுக்கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஒற்றை பாடல் புகழால் இன்று அறிவு பல படங்களில் வாய்ப்பு பெற்று சிறப்பாக பணியாற்றி வெற்றி கண்டுள்ளார். இழப்பு ஒன்றும் இல்லை கூறினாலும், உழைப்புக்கு ஏற்ற பங்கை கேட்டு பெறுவதில் தவறில்லையே..! என்பதே இசை ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
enjoy ன்னு சொல்லிட்டு.. ஏம்பா சண்டை போடுறீங்க..?
சந்தோஷ் நாராயணன் - அறிவு மோதலின் பின்னணி என்ன ?
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu