RECENT NEWS

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

செல்போனை பரிசோதித்த கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

Mar 13, 2026

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

செல்போனை பரிசோதித்த கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

Mar 13, 2026

தமிழ்நாடு

செல்போனை பரிசோதித்த கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

Mar 13, 2026 01:36 AM

27

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

செல்போனை பரிசோதித்த கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி..!

கள்ளக்குறிச்சியில் மனைவியுடனான சண்டையில் கணவன் தீக்குளித்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக மனைவியை போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி கேசவலு முதல் தெரு பகுதியில் வசித்து வந்தவர் அந்தோணி ராபின் ( வயது 26). இருவருக்கு அம்மு (24). என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். சின்னசேலம் பகுதியில் தங்கி கியாஸ் நிறுவனம் ஒன்றில் அந்தோணி ராபின் வேலை பார்த்து வந்தார். ஊருக்கு வரும்போதெல்லாம் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கேள்வி கேட்பதால், கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வெளியே உடலில் பெட்ரோல் ஊற்றி தனது கணவர் தீ வைத்துக் கொ
ண்டதாக கூறி அம்மு அலறினார். தனது கணவன் உயிரோடு தீப்பற்றி எரிய அலறிக் கொண்டே காப்பாற்ற கூச்சலிட்ட மனைவியின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்து வீட்டார் ஓடிவந்து , தீயை அணைத்தனர். உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை 10 மணி அளவில் அந்தோணி ராபின் இறந்துவிட்டார். அவரது சடலம் உடற்கூறாய்வுக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. அந்தோணி ராபின் இறந்ததை அறிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேலம் விரைந்து வந்தனர்.

கள்ளக்குறிச்சி போலீசார் வராததால் இரு தினங்களக சடலம் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. அந்தோணி ராபின் உறவினர்கள் கூறும் போது, அந்தோணி ராபின் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வீட்டிற்குள் இருந்து உடலில் பெட்ரோல் ஊற்றப்பட்ட நிலையில் கண்களை கசக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்து அமர்ந்திருந்த ராபின் மீது அவரது மனைவி தீவைத்ததாக கூறிய உறவினர்கள், பக்கத்து வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக ஒப்படைத்தனர்

இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் அந்தோணி ராபினின் மனைவி அம்முவை பிடித்து விசாரித்த போது கணவன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவதால் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னுடன் சண்டையிட்டு துன்புறுத்தி வந்ததால் கொலை செய்ததாக கூறி போலீசாரை அதிரை வைத்தார். சம்பவத்தன்று இரவு தனது செல்போனை எடுத்து நான் யார் யாருடன் பேசி இருக்கிறேன் என்றும் வாட்ஸ் அப் சாட்டிங் விவரத்தையும் பார்த்ததால் மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அவர் என்னை தாக்கியதால் உண்டான ஆத்திரத்தில் பெட்ரோலை ஊற்றி அவர் மீது தீவைக்க முயன்றேன் தெரிவித்த அம்மு, பெட்ரோல் ஊற்றியதும் தப்பித்து வெளியே ஓடிய அவர் , அங்கு அமர்ந்திருப்பதை பார்த்ததும், கணவர் அந்தோணி ராபின் மீது தீயை பற்ற வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

அம்முவை கொலை வழக்கில் கைது செய்த போலீசார் இந்த கொலைக்கு பின்னணியில் வேறு நபர்களின் தூண்டுதல் உள்ளதா ? என்று விசாரித்து வருகின்றனர். செல்போனை பரிசோதித்த ஆத்திரத்தில் கணவர் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies