RECENT NEWS

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

செல்போனை பரிசோதித்த கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

Mar 13, 2026

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

செல்போனை பரிசோதித்த கணவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்

Mar 13, 2026

BIG STORIES

“அவருதாம்பா பெரிய வேலையா பார்த்து விட்டு போயிட்டாரு...”பொதுமக்களின் மறியல் பின்னணி..! சினிமா பாணி இன்ஸ்பெக்டரால் சிக்கல்

Mar 13, 2026 01:34 AM

20

“அவருதாம்பா பெரிய வேலையா பார்த்து விட்டு போயிட்டாரு...”பொதுமக்களின் மறியல் பின்னணி..!
சினிமா பாணி இன்ஸ்பெக்டரால் சிக்கல்

“அவருதாம்பா பெரிய வேலையா பார்த்து விட்டு போயிட்டாரு...”பொதுமக்களின் மறியல் பின்னணி..! சினிமா பாணி இன்ஸ்பெக்டரால் சிக்கல்

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை அருகே 12 ஆம் வகுப்பு மாணவி படுகொலை சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்திய உறவினர்களை சமாதானப்படுத்த , வரவழைக்கப்பட்ட முறப்ப நாடு காவல் ஆய்வாளர் ஹரிஹரன் , இளைஞர்களை எச்சரித்ததால் ஊருக்குள் நடந்த போராட்டம் , இடம் பெயர்ந்து தேசிய நெடுஞ்சாலையையே முடக்கிப்போட்டது.

சாமி திரைப்படத்தில் வரும் சினிமா போலீஸ் போல பப்ளிக்கை பப்ளிசிட்டிக்காக எச்சரித்த இவரு தாங்க ... தேசிய நெடுஞ்சாலையில் இவ்வளவு பெரிய மறியல் போராட்டம் உருவாக காரணமானவர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா...? நம்பலனாலும் அது தான் நெசம்..! என்கின்றனர் போராட்டக்குழுவினர்.

பிரீத்(())

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி இயற்கை உபாதையை கழிக்க சென்ற நிலையில் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார் அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும், கொலையாளிகளை கைது செய்ய கோரியும், உறவினர்களும் கிராமத்து மக்களும் அந்த கிராமத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்து விடுவோம் , அதுவரை இங்கேயே இருப்பேன் என்று உறுதி அளித்த எம்.எல்.ஏ மார்க்கண்டேயனும் வீட்டுக்கு சென்று விட்டார்.

மாணவியின் கொலை சம்பவத்துக்கு நீதி கேட்டு வியாழக்கிழமை காலையில் அந்த கிராமத்து சாலையில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்வதற்காக சிறுமியின் சாதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஒருவரை போராட்ட களத்துக்கு அனுப்ப போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது.

இதையடுத்து  “ஸ்ரிக்ட் ஆபீசர்” முறப்ப நாடு காவல் ஆய்வாளர் ஹரிஹரன் அனுப்பி வைக்கப்பட்டார். அவரும் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று பாதுகப்பு பணியை மேற்கொண்டார். மறியலில் ஈடுபட்ட இளைஞர்களில் சிலர் இங்கேயே இருந்தால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது என்று பைக்கை எடுத்துக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையை நோக்கிச் செல்ல முயன்றனர். உடனடியாக இளைஞர்களின் பைக் சாவியை பறித்த ஹரிஹரன் , “மறியலில் ஈடுபட்டால் உங்களை எல்லாம் கைது செய்து ஜெயிலில் ரிமாண்ட் செய்து விடுவேன்” என கடுமையாக எச்சரித்தார்

பைக் சாவியை கேட்டு அவர் கொடுக்க மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் மிரட்டும் வகையிலேயே அவர் பேசிக் கொண்டிருந்ததால் , அமைதியாக நின்றவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து, உக்கிர மனநிலைக்கு சென்று அந்த பகுதி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்

காவல் ஆய்வாளர் ஹரிகரனின் மிரட்டலால் ஆவேசமான சிலர் உணர்ச்சிவசப்பட்டு தடைகளை மீறி நடந்தே சென்று குறுக்குசாலை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தொடங்கினர்

அப்போதும் பேச்சுவார்த்தை நடத்த உரிய அதிகாரிகள் செல்லாத நிலையில், மாணவர் அமைப்புகளும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தது

அதனை தொடர்ந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்த விசிக கட்சியினரிடம், இதே காவல் ஆய்வாளர் ஹரிகரன், சாலைமறியல் செய்தால் நீதி கிடைத்து விடுமா ? என்று எகத்தாளமாக கேட்க, இங்கே போராடினால் தான் நீதி கிடைக்கும் என்று கூறி அவர்களும் போராட்டத்தில் பங்கெடுத்தனர்

தகவல் அறிந்து இன்னும் பல்வேறு அமைப்புகள் அங்கு கூட தொடங்கினர். ஏராளமான அமைப்பினரும் மாணவி கொலைக்கு நீதி கேட்டு முழக்கம் எழுப்ப தொடங்கினர்.

இதனால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பல கிலோ மீட்டர் தூரம் துறைமுகம் செல்லும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றது. 7 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்தும் முடங்கியது.

இதனை அடுத்து சிறப்பு பணிக்காக அழைத்துவரப்பட்ட காவல் ஆய்வாளர் ஹரிகரன் உடனடியாக முறப்ப நாடு காவல் நிலையத்துக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அதன் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் மற்றும் வருவாய் துறையினர் மக்களுடன் பேச்சுவர்த்தை நடத்தினார்

அங்கு திரண்டிருந்த பல்வேறு அமைப்பினர், கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி மறியலை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

செல்போனை பரிசோதித்த  கணவர் உடலில் பெட்ரோல் 
ஊற்றி தீ வைத்த மனைவி..! வாட்ஸ் அப் சாட்டிங் ரகசியத்தால் ஆவேசம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies