முகப்பு
இந்தியா கைப்பற்றி வைத்துள்ள மூன்று எண்ணெய்க் கப்பல்களை விடுவிக்கும்படி மத்திய அரசுக்கு ஈரான் கோரிக்கை
Mar 17, 2026 01:00 AM
50
இந்தியா கைப்பற்றி வைத்துள்ள மூன்று எண்ணெய்க் கப்பல்களை விடுவிக்கும்படி மத்திய அரசை ஈரான் கேட்டுக்கொண்டுள்ளது.
கப்பல்களை விடுவித்தால், அதற்குப் பதிலாக ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கப்பல்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் இந்தியாவுக்கான ஈரான் தூதர் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
மேற்காசியா போர் தொடங்கிய நிலையில், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி, ஈரானைச் சேர்ந்த 3 எண்ணெய்க் கப்பல்கள் கச்சா எண்ணெய்யுடன் மும்பை அருகே கைப்பற்றப்பட்டன.
சட்டவிரோத கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவற்றை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu