முகப்பு
ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்
Mar 17, 2026 01:21 AM
227
ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்
ஈரான் மீதான தாக்குதல்களால் அந்நாட்டின் கடற்படையும், விமானப்படையும் முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
மேற்காசியா போர் விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரானில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஈரானின் அரசுத் தலைமையும் அழிக்கப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 30-க்கும் மேற்பட்ட கண்ணிவெடி புதைக்கும் கப்பல்கள் போன்றவை கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரானின் சுப்ரீம் தலைவராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாகவும், ஒரு காலை இழந்துவிட்டதாகவும் பலவிதமான தகவல்கள் வருவதாகவும், இப்போதைக்கு ஈரானை வழிநடத்தும் தலைவர் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் டிரம்ப் கூறினார்.
பல நாடுகளின் பொருளாதாரம் ஹோர்முஸ் நீரிணையை நம்பித்தான் உள்ளது என்றும், அந்த நீரிணையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, ஐரோப்பிய யூனியனும், ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu