BIG STORIES
7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
Mar 18, 2026 01:45 AM
16
7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
சென்னை பல்லாவரம் அருகே காதலித்து திருமணம் செய்த கணவனின் நடவடிக்கை பிடிக்காமல், பிரிந்து வாழ்ந்த மனைவி வேலைக்கு செல்வதை தடுத்து நிறுத்துவதற்காக, முகத்தில் ஆசிட் ஊற்றி கண்பார்வையை பறித்த கொடூர கணவனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உருக உருக காதலித்து ... 6 வருடம் திருமண வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட காதல் மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில். விரட்டி விரட்டி அவரது முகத்தில் ஆசிட் வீசிய பதைபதைக்கும் காட்சிகள் தான் இவை..!
பல்லாவரம் பாரதி நகரை சேர்ந்தவர் ஷானா பாத்திமா (29). இவரது காதல் கணவர் முகம்மது அலி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணத்திற்கு பின்னர் காதல் கசக்க தொடங்கியது. முகம்மது அலியின் நடவடிக்கைகள் மாற தொடங்கியது. காதலிக்கும் போது உயிரே என்று உருகியவர் அதன் பின்னர் வேறு வேறு பெண்கள் பக்கம் பார்வையை திருப்பியதால கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
ஷானா பாத்திமாவும் பொறுத்து பொறுத்து பார்த்து விரக்தி அடைந்ததால் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவர் முகமது அலியை பிரிந்து தந்தை வீட்டிற்கு சென்று விட்டார். ஷானா பாத்திமா பட்டதாரி பெண் என்பதால் அவர் தனியாக வேலைக்கு சென்று தனது வாழ்க்கையை நகர்த்த தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த முகம்மது அலி ஷானா பாத்திமாவை வீட்டிற்குள்ளேயே முடக்கிபோட திட்டமிட்டார். அதன்படி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதை நோட்டமிட்டு வெளியே காத்திருந்த முகமது அலி , வீட்டிலிருந்து வெளியே புறப்பட்ட ஷானா பாத்திமா மீது ஆசிட்டை ஊற்றியதாக கூறப்படுகின்றது
வலிதாங்காமல் அலறியபடியே வீதியில் ஓடிய அவரை விடாமல் துரத்திச்சென்று முகம்மது அலி ஆசிட் வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்
ஆசிட் வீசிவிட்டு தப்பிக்க பார்த்த முகம்மது அலியை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் மடக்கிப்பிடித்தனர்.
போலீசார் வருவதற்குள்ளாக அவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகின்றது. விசாரணையில், அழகு இருக்கு என்ற திமிறில் தானே என்னை விட்டு அவள் பிரிந்து சென்றாள், இனி எப்படி தனியாக வேலைக்கு செல்வாள் ? என்று முகம்மது அலி ஆசிட் வீசியதாக கூறப்படும் நிலையில், ஆசிட் வீச்சுக்கு இலக்கான ஷானா பாத்திமா தனக்கு, கண்களில் ஆசிட் முழுமையாக பட்டதால் பார்வை திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
தலைமறைவாக உள்ள முகமது அலியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். 6 ஆண்டு காதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மண முறிவை பொறுத்துக் கொள்ள முடியாமல் காதல் கணவனே இப்படி கொடூரமாக நடந்து கொண்டது காதலிக்கும் பெண்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu