தமிழ்நாடு
கோடைகாலத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை
Mar 18, 2026 01:20 AM
15
கோடைகாலத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை
தமிழகம் - கர்நாடக எல்லைப் பகுதியான சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. விவசாய நிலங்களில் எங்கும் பனிக்கட்டிகள் கொட்டின.
ஆலங்கட்டி மழையால் சிவன்புரா, வீரன்புரா பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி, வாழை பயிர்கள் சேதமடைந்தன.
கடும் வெயிலால் அவதிப்பட்ட பொதுமக்களுக்கு ஆலங்கட்டி மழை மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் லேசான சாரல் மழையும், பனிமூட்டமும் நிலவிய நிலையில், கீழ்மலைக் கிராமமான பூலந்தூரில் ஆலங்கட்டி மழை பெய்தது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu