உலகம்
ஆப்கனில் போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் பலி; 300 பேர் காயம்
Mar 17, 2026 10:25 AM
20
ஆப்கனில் போதை மறுவாழ்வு மையம் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் பலி; 300 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் வரை காயமடைந்ததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அஞ்சப்படுகிறது.
இது பற்றி ஆப்கன் தாலிபன் ஆட்சியாளர்கள் வெளியிட்ட செய்தியில் நேற்று இரவு 9 மணி அளவில் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.
பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்றும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் உடன் இனி சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற சூழலில், அண்மை காலமாக பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக போர் மூண்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu