மாவட்டம்
காட்டுப் பகுதியில் எரிந்து கருகிய நிலையில் நின்றிருந்த கார்.! காருக்குள் அடையாளம் தெரியாமல் கிடந்த 4 சடலங்கள்..!
Mar 17, 2026 09:59 AM
38
காட்டுப் பகுதியில் எரிந்து கருகிய நிலையில் நின்றிருந்த கார்.! காருக்குள் அடையாளம் தெரியாமல் கிடந்த 4 சடலங்கள்..!
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே பெட்டைக் குளம் காட்டுப் பகுதியில் எரிந்துபோன காருக்குள் இருந்து கருகிய நிலையில் 4 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காரின் பதிவெண் மற்றும் சேஸ் எண்ணைக் கொண்டு விசாரித்ததில், அது சென்னை நந்தனத்தைச் சேர்ந்த முகம்மது நபி என்பவருடையது என்பது தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கார் அப்பகுதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்ற பள்ளி வாசலுக்குச் சென்று வந்தது சிசிடிவி மூலம் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நான்கு சடலங்களில் இரண்டு சடலங்களின் மண்டை ஓடுகள் பெரியதாகவும் இரண்டு மண்டை ஓடுகள் சிறியதாகவும் உள்ளதால், முகம்மது ரபி தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu