RECENT NEWS

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன..? - செந்தில்பாலாஜி விளக்கம்

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன..? - செந்தில்பாலாஜி விளக்கம்

Mar 18, 2026

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன..? - செந்தில்பாலாஜி விளக்கம்

கரூரில் கூட்ட நெரிசல் வழக்கு.. சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன..? - செந்தில்பாலாஜி விளக்கம்

Mar 18, 2026

BIG STORIES

நோன்பு திறந்து ஹோட்டலில் சவர்மா, சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வக்கீல் குடும்பத்திற்கு சோகம்..! தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடம்..!

Mar 18, 2026 12:41 AM

22

நோன்பு திறந்து ஹோட்டலில் சவர்மா, சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வக்கீல் குடும்பத்திற்கு சோகம்..! தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடம்..!

நோன்பு திறந்து ஹோட்டலில் சவர்மா, சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வக்கீல் குடும்பத்திற்கு சோகம்..!

மதுரை கேகே நகர் பகுதியில் பரக்கத்துல்லா என்பவர் செஃப் வாரியர் என்ற சாலையோர உணவகத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மதுரை கேகே நகர் பகுதியை சேர்ந்த சபீர் முகமது - சபியா பானு என்ற வழக்கறிஞர் தம்பதியினரும், சிவகங்கையை சேர்ந்த சபீர் முகமதுவின் தம்பியின் குடும்பம் என மொத்தம் 7 பேர் நோன்பு திறந்துவிட்டு, செஃப் வாரியர் உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர்.

செஃப் வாரியர் உணவகத்தில் அவர்கள் சவர்மா மற்றும் சிக்கன் ரைஸ் உணவை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சபீர் முகமதுவின் தம்பியின் குடும்பம் சிவகங்கைக்கும், சபீர் முகமதுவின் குடும்பம் கேகே நகரில் உள்ள வீட்டிற்கும் சென்றுள்ளனர்.

உணவு சாப்பிட்ட அனைவருக்கும் அதிகாலையில் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். ஆனால் உடல் நிலை சீராகாததால் அவர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

ஃபுட் பாய்சன் காரணமாக அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது குடும்பத்தை சேர்ந்த இக்ரம் என்ற ஆறு வயது சிறுவன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ள நிலையில் சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதை உணர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சபீர் முகமது, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முகமது காசிம், கடையில் தரமற்ற உணவுகளும் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் இருப்பதையும் கண்டறிந்து உடனடியாக உணவகத்திற்கு சீல் வைத்தார்.

பின்னர் பரக்கத்துல்லாவின் செஃப் வாரியர் உணவகம் அந்த இடத்தில் சிறிய அளவில் தள்ளுவண்டிக்கடை போல செயல்பட்டதும், நாளடைவில் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கு செஃப் வாரியர் உணவகம் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மதுரை மாநகராட்சி அதிகாரிகள் காலையில் அந்த உணவகத்தை முற்றிலுமாக இடித்து தரைமட்டம் ஆக்கினர்.

சிறுவன் உடல்நிலை மோசமாக இருக்கும் நிலையில், சிறுவனும் குடும்பத்தினரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் செஃப் வாரியர் உணவகத்தின் உரிமையாளர் பரக்கத்துல்லா தலைமறைவான நிலையில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies