BIG STORIES
அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..
Feb 06, 2026 03:58 PM
34
வெ*டிச் சாய்த்தது கூலிப்படை
மதுரையில் கடைவாசலில் மது அருந்தியவர்களை தட்டிக்கேட்டதில் அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக குடும்ப தகராறில் கூலிப்படையை ஏவி கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மதுரை சாமநத்தம் உயர்நிலைப்பள்ளி அருகே டீக்கடை நடத்தி வருபவர் செல்வம் என்கிற முத்து. இவரது மகன் தனசேகர பாண்டியன் என்கிற செந்தில் செந்திலுக்கு கவியா என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். சாமநத்தம் ஊராட்சியின் முன்னாள் துணை தலைவராக இருந்தவர் செந்தில், தற்போது அதிமுக இளைஞர் ஒன்றிய பாசறை செயலாளர் ஆக பொறுப்பு வகித்தார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை செந்தில் வழக்கம் போல் தங்கள் டீக்கடையை திறக்க சென்று உள்ளார்.
அப்போது டீக்கடை வாசலில் அமர்ந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும், அவர்களை எழுந்திருக்க சொன்னதால் உண்டான வாக்குவாதம் முற்றி அந்த கும்பல் செந்தில்குமாரை டீக்கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி, தலையை துண்டித்துவிட்டு தப்பிச்சென்றதாகவும்தலையை துண்டித்து கொலை செய்ததாக கூறப்பட்டது.
செந்திலை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடவேயது - அக்கம் பக்கத்தினர் டீக்கடைக்கு எதிரே உள்ள செந்திலின் வீட்டில் இருந்த அவரது தந்தை செல்வத்திடம் கூறினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்துக்கிடமான 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் செந்திலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக தகவல். அவரது மனைவி 4 நாட்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டசூழலில் தான், கொலை நடந்திருப்பது தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததாக தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் , அது என்ன பிரச்சனை ?என்பதை பின்னர் கூறுவதாக தெரிவித்தார்.
அதிமுக நிர்வாகி செந்தில் குடும்ப பிரச்சனையால் கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தரப்பில் சொல்லப்பட்டாலும்,இந்த கொலைக்கு முன் கூட்டியே திட்டமிட்டு , கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்படுகின்றது.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும்,கின்றனர். இதில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடிவருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அனைத்து கொலையாளிகளும் சிக்கினால் யாருக்காக ? யார் தூண்டுதலின் பேரில் ? என்ன பிரச்சனைக்காக இந்த கொடூர கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்பது வெளிச்சத்துக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu