மாவட்டம்
அரசுப் பள்ளி, தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை.. உணவு டெலிவரி ஊழியர் உள்பட 3 பேர் கைது.!
Feb 06, 2026 10:39 AM
9
அரசுப் பள்ளி, தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை
நாமக்கல் மாவட்டம் பாப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பள்ளிப்பாளையத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் லேப்டாப், டிஜிட்டல் கேமரா, 10 ஆயிரம் ரொக்கம், செல்போன் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் சபரிராஜ் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் மற்றும் 8 ஆயிரம் ரொக்கம், இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு டெலிவரிக்குச் செல்லும்போது, ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களைக் குறித்துவைத்து நண்பர்கள் மூலம் சபரிராஜ் கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu