முகப்பு
மாணாக்கர்கள் இணைய தளத்தில் நேரத்தை வீணாக்கக் கூடாது - பிரதமர் மோடி அறிவுரை
Feb 06, 2026 10:03 AM
20
பிரதமர் மோடி அறிவுரை
நாட்டில் இணையசேவை குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதற்காக மாணாக்கர்கள் இணையத்தில் நேரத்தை வீணாக்காமல் வாழ்க்கை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மன அழுத்தமின்றி தேர்வை எதிர்கொள்ள 'பரீக்சா பே சர்ச்சா' என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி நடத்தினார். சென்னை, கோயம்புத்தூர், கவுகாத்தி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து மாணவர்கள் அதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், படிப்பை சுமையாக நினைக்க வேண்டாம் என்றும் மதிப்பெண்கள் இலக்காக கொள்ளாமல் புரிந்து படிக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுரை வழங்கினார்.
மேலும், ஆன்லைனில் பணம் வைத்து கேமிங்கில் ஈடுபடுவோர் வாழ்கையில் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வார்கள் என சுட்டிகாட்டிய அவர், சிறந்த கேம்களை தேர்ந்தெடுத்து திறமை, கவனம், சுய விழிப்புணர்வை வளர்க்க பயன்படுத்த வேண்டும் என்றார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu