முகப்பு
''வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது'' - கதைத்திருட்டு வழக்கில் பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
Feb 06, 2026 01:40 PM
8
கதைத்திருட்டு வழக்கில் பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்ற வரலாற்று நிகழ்வுக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என பராசக்தி பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
தனது செம்மொழி என்ற படத்தின் கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டதாக வருண் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதன் விசாரணையின்போது பராசக்தி படத்தின் கதைக்களம் வேண்டுமானால் போராட்டக் காலத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் ஆனால், கதாபாத்திரங்கள் திரைக்கதை முற்றிலும் கற்பனையானவை என படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளித்தது. இதனையடுத்து வழக்கை நீதிபதி பிப்ரவரி 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu