கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
முகப்பு
வேலூர் அருகே அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம்?
Feb 07, 2026 10:22 AM
10
வேலூர் அருகே அகரம்சேரியில் தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டம்?
வேலூர் அருகே அகரம்சேரி பகுதியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் கூட்டத்தை இம்மாத இறுதி வாரத்தில் நடத்திக்கொள்ள மாவட்ட காவல் துறை அனுமதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தேச தேதிகளை தெரிவிக்கும்படி தவெகவினருக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, அகரம்சேரி பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தவெகவினர் மேற்கொண்டுள்ளனர்.
அருகில் உள்ள மைதானம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வாகன நிறுத்தத்துக்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகள் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த மக்களை விஜய் சந்திக்க உள்ளதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu