RECENT NEWS

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Feb 12, 2026

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Feb 12, 2026

முகப்பு

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..! சந்தேகத்தால் ஒரு கொலை

Apr 27, 2025 02:42 AM

556

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு..!
  சந்தேகத்தால் ஒரு கொலை

“இனி அது பேய் கிணறு” செல்போனில் தீரா பேச்சு.. மனைவி உயிரும் போச்சு.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே மனைவி யாருடன் செல்போனில் பேசுகிறார் என்பதைக் கண்டறிய செல்போனைப் பறிக்க முயன்ற கணவன், மனைவியைக் கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார் .

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். 43 வயதான இவருக்கு 33 வயதில் சத்தியபிரியா என்ற மனைவியும், 3 மகன்களும் இருந்தனர். திருமணமாகி சுமார் 13 வருடங்கள் ஆன நிலையில் மனைவி சத்தியபிரியாவின் நடத்தையில் சக்திவேலுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு அருகில் நின்று சத்தியபிரியா நீண்ட நேரமாக செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த கணவர் சக்திவேல் யாருடன் செல்போனில் பேசுகிறாய் ? என மனைவியை பார்த்து கேட்டதால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சக்திவேல் சத்திய பிரியாவின் கையில் இருந்த செல்போனை பிடுங்குவதற்காக முயற்சித்தபோது இருவருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கிணற்றுக்கு அருகில் நின்று செல்போனை இருவரும் பிடித்து இழுத்தபோது ஏற்பட்ட தகராறில் சத்தியபிரியா கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. சுமார் 85 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்த சத்தியபிரியா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் தா.பேட்டை காவல் நிலையத்திற்கும், முசிறி தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன் தலைமையில் விரைந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றுக்குள் சடலமாக கிடந்த சத்தியபிரியா உடலை கயிறுகட்டி மீட்டனர். தா.பேட்டை போலீசார் சத்தியபிரியாவின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்ததாக சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் ஓயாத செல்போன் பேச்சால் அவர் மீது கணவனுக்கு உண்டான தீராத சந்தேகம் கொலையில் வந்து முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டும் போலீசார், இருவரது விபரீத செய்கையால் அவர்களது 3 மகன்களும் நிற்கதியாய் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

ஆயிரம் ஆண்டு பழமையான லைம் ஸ்டோன் குகைகள்... சிலிர்க்கவைக்கும் ரகசியங்கள்... அந்தமானிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies