RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

முகப்பு

நேர்மையான ஆபீசரை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்க வைத்த மர்ம நபர் ..! நள்ளிரவு சதி சிசிடிவியால் அம்பலம்

Nov 21, 2025 02:12 AM

446

நேர்மையான ஆபீசரை லஞ்ச ஒழிப்பு போலீசிடம் சிக்க வைத்த மர்ம நபர் ..! நள்ளிரவு சதி சிசிடிவியால் அம்பலம்

நேர்மைக்கு கிடைத்த வெகுமானம்.. லஞ்ச சதி பணம் வைத்த மர்ம நபர் சிசிடிவியால் அம்பலம்

நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துரையினருக்கு தகவல் வருகின்றது. அந்த தகவலின் அடிப்படையில் கடந்த 18ந்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தியதில் அங்குள்ள ஒரு கபோர்டில் கணக்கில் வராத 2 லட்சத்தி 51 ஆயிரத்து 500 ரூபாய் பணம் சிக்கியது.

அப்போது அலுவலகத்தில் இருந்த தீயணைப்பு துறை மண்டல துணை இயக்குனர் சரவணபாபு , அங்கிருந்து எடுக்கப்பட்ட பணத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அது எப்படி தனது அலுவலகத்திற்குள் வந்தது என்றும் தெரியாது என்று கூறி இருந்தார்.

தான் லஞ்சம் வாங்க வில்லை, என்று சரவணபாபு மறுத்தாலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துணை இயக்குனர் சரவணபாபு மற்றும் அவரது ஓட்டுனர் செந்தில் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முந்தைய நாள் இரவு துணை இயக்குனர் அலுவலகத்தில்18ந்தேதி அன்று நள்ளிரவு 12.10 மணிக்கு மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கையில் பையுடன் அலுவலகத்தை திறந்து பணத்தை வைத்துச்சென்ற காட்சிகள் எதிர் வீட்டில் உள்ள சிசிடிவி பதிவாகி இருந்தது.

இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்த சரவணபாபு, கடமையில் நேர்மையான அனுகுமுறையால் ஹானஸ்ட் ஆபீசர் என்று பெயரெடுத்த தன் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தனக்கு வேண்டாத யாரோ மர்ம நபர் இந்த சதிவலையில் தன்னை சிக்க வைத்துள்ளதாக சரவணபாபு தெரிவித்தார்.

நள்ளிரவில் அவரது அலுவலகத்திற்குள் பையுடன் செல்லும் மர்ம நபர், வெறுங்கையுடன் வெளியே திரும்பும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால். இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து நள்ளிரவில் அலுவலகத்திற்குள் செல்லும் காட்சி பதிவானது எப்போது ? சிசிடிவியில் பதிவான நபர் யார் ? பணம் வைத்து சென்றதன் நோக்கம் என்ன ? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார் .

லஞ்சப்பணத்தில் கொழுத்தவர்கள் சூழ்ந்துள்ள அரசு பணியில் நேர்மையாக இருந்தவரை சினிமா போல திட்டம் போட்டு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies