கோவை விமான நிலையத்தில் 895 இ-சிகரெட்கள் பறிமுதல்
Feb 17, 2026
முகப்பு
🔴LIVE : வேளாண் பட்ஜெட் தாக்கல் | TN Budget 2026 Live | TN Agriculture Budget | Budget Live
Feb 17, 2026 06:53 AM
91
வேளாண் பட்ஜெட் தாக்கல்
வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
உழவர் உழைக்கவில்லை என்றால் இந்நிலத்தில் யாரும் உயிர் வாழ முடியாது
உணவு உற்பத்தியை அதிகரிப்பதே தமிழக அரசின் இலக்கு
58 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன
53 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன
10,558 சிறு பாசன குளம், ஊரணி கால்வாய் தூர்வாரி மேம்படுத்தப்பட்டது
மண்ணுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.178 கோடியில் 21.35 லட்சம் விவசாயிகள் பயன்
தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க நடவடிக்கை
கோவை நம்மாழ்வார் இயற்கை வேளாண் ஆராய்ச்சி நிலையம் இயற்கை வேளாண் குறித்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறது
நெல் ஜெயராமன் பெயரிலான திட்டத்தில் 900 மெ. டன் பாரம்பரிய நெல் விதை 70 ஆயிரம் விவசாயிகளுக்கு விநியோகம்
ரூ.482 கோடியில் குறுவை சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டு 19.51 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்
2025-26ல் 12.48 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி - கடந்த ஆண்டை விட 3 லட்சம் ஏக்கர் கூடுதல் சாகுபடி
இளைஞர்களை வேளாண் துறையில் தொழில்முனைவோராக்க ரூ.4.56 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது
உரம் விதைகளை வழங்க ஆயிரம் உழவர் நல சேவை மையம் அமைக்கப்பட்டு வருகிறது
வேளாண் காடுகளை ஊக்குவிக்க தமிழ்நாட்டின் வேளாண் காடுகள் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் வெளியிடப்பட உள்ளது
பாரம்பரிய உணவுகளை காக்க 20.80 லட்சம் ஊட்டச்சத்து தளைகள் விநியோகம்
பழம் காய்கறி பரப்பு விரிவாக்கம் செய்ய ஊக்குவிக்கப்படுகின்றன
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12.84 லட்சம் விவசாயிகள் ரூ.178 கோடி நிதி பெற்றுள்ளனர் - 20 லட்சம் ஏக்கரில் சிறு தானியம் சாகுபடி
கம்பு சாகுபடி பரப்பு ஒரு லட்சத்து 18 ஆயிரம் ஏக்கரில் இருந்து ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கராக அதிகரிப்பு
துவரை சாகுபடி விரிவாக்க இயக்கம் மூலம் ரூ.66 கோடியில் 2.55 லட்சம் ஏக்கரில் சாகுபடி - 1.48 லட்சம் விவசாயிகள் பயன்
மக்காசோளம் சாகுபடி பரப்பு 10 லட்சம் ஏக்கரில் இருந்து 12 லட்சம் ஏக்கராக அதிகரித்துள்ளது
1,320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைப்பு
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 77,499 வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன
4,150 சூரிய சக்தி பம்பு செட்கள் வாங்க ரூ.83 கோடி மானியம் வழங்கல்
5,000 புதிய பம்பு செட்கள் ரூ.7 கோடியில் வழங்கப்பட்டுள்ளது
கடைநிலை வரை பாசன நீர் செல்ல ஏதுவாக 8,371 கி.மீ நீளம் கொண்ட வாய்க்கால் ரூ.33.77 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளது
23,86,000 இலவச மின் இணைப்புகளுக்கு இலவச மும்முனை மின்சார வழங்க இதுவரை ரூ.33,904 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்திற்கு ரூ.19 கோடி நிதி விநியோகம்
தக்காளி, வெண்டை, கத்தரியை 1 லட்சம் ஹெக்டேரில் விரிவாக்கம் செய்ய 1.68 லட்சம் விவசாயிகளுக்கு மானியம்
மிளகாய், மஞ்சள், ஏலக்காய், சாதிக்காய் ஆகியவை 22,950 ஏக்கர் பரப்பு விரிவாக்கம் - 29,855 விவசாயிகள் பலனடைந்துள்ளனர்
மலர் விவசாயத்தை 11,350 ஹெக்டரில் அதிகரிக்க ரூ.28 கோடி மானியம் - 18,130 விவசாயகள் பலன்
முந்திரி உற்பத்தியை 8,400 ஹெக்டேருக்கு அதிகரிக்க ரூ.12 கோடி மானியம் - 9,687 விவசாயிகள் பலன்
2,000 முந்திரி சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன
சந்தை மதிப்பை உயர்த்தவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 3435 சிப்பம் கட்டும் அறைகள் அமைப்பு
8,218 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 5 குளிர்பதன கிடங்குகள், 3,44,000 மெட்ரிக் டன் கொள்ளளவிலான வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைப்பு
தென்னை உற்பத்தியை அதிகரிக்க தென்னை நாற்று மையம் உட்பட 1,7867 ஹெக்டேரில் ரூ.54 கோடியில் அமைப்பு
தென்னை வேர் வாடல் நோய் பாதித்த மரங்களை வெட்டி அகற்ற ரூ.18.48 கோடி வழங்கப்பட்டது
பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் 5 ஆண்டில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம்
1,350 பேருக்கு பனை மதிப்புக்கூட்டு பொருள் தயாரிக்க பயிற்சி
5 ஆண்டில் ரூ.80 கோடியில் பனை பொருள் விற்பனை செய்யப்பட்டுள்ளது
5 ஆண்டில் 186 லட்சம் மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
ரூ.1,600 கோடி மதிப்பிலான கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது
தமிழக அரசால் ரூ.6073 கோடி இயற்கை பேரிடர் நிவாரணமாக வழங்கப்பட்டது
5 ஆண்டில் இயற்கை பேரிடர்களுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது - 25.36 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளனர்
5 ஆண்டுகளில் 137 லட்சம் மெ. டன் வேளாண் பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் பரிவர்த்தனை
150 ஒழுங்குமுறை விற்பனை கூட்டங்கள் மின்னணு சந்தையுடன் இணைப்பு - 18 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்
5 ஆண்டில் குளிர்பதன கிடங்குகள் அமைக்க ரூ.27 கோடி செலவிடப்பட்டுள்ளது
5 ஆண்டில் 15 புதிய உழவர் சந்தைகள் அமைப்பு - ரூ.46 கோடியில் உழவர் சந்தைகள் புதுப்பிப்பு
உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகளின் அளவு நாள்தோறும் 2,500 மெ. டன்னாக அதிகரிப்பு
தக்காளி, மா, பலா, மிளகாய், தேங்காய் போன்றவற்றை மதிப்புக்கூட்ட 25-35% வரை மானியம்
2020-21ல் ஒரு லட்சத்து 8000 மெட்ரிக் டன்னாக இருந்த வர்த்தகம், தற்போது 8 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது
கோவை, திருச்சி, தூத்துக்குடி, சென்னையில் உணவு பரிசோதனை ஆய்வு மையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன
வேளாண் கல்வி, கல்லூரிகளுக்கு ரூ.3,065 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
விண்ணப்பிக்கப்பட்ட 41 விளை பொருட்களில் 9 விளைபொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது
நாகை, சிவகங்கை, கரூரில் அரசு வேளாண் கல்லூரி, கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது
பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது
5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன
பல்வேறு ஆராய்ச்சி திட்டங்களுக்கு ரூ.134 கோடி நிதி ஒதுக்கப்பட்டது
வேளாண் கல்லூரியில் இளங்கலை மாணவர் சேர்க்கை 97%-ஆக உயர்வு
24 சேவைகளுடன் கூடிய உழவர் கைபேசி செயலியை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்
150 விவசாயிகள் அயல் நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்
30,000 பேருக்கு தேனீ வளர்ப்பு, மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன
தனியாரிடம் இருந்து 176 ஏக்கர் அரசு நிலத்தை மீட்டு இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்கள் உருவாக்கம்
தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் கழகம் மூலம் 5,000 மெ. டன் அளவு வேளாண் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு
பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண்சார் நடவடிக்கைக்காக ரூ.3,002 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டுள்ளது
24 லட்சம் ஏக்கரில் ரூ.174 கோடியில் பயறு பெருக்குத் திட்டம் - 9.44 லட்சம் விவசாயிகள் பயன்
14 லட்சம் ஏக்கரில் ரூ.229 கோடியில் எண்ணெய்வித்து பயிர்களின் சாகுபடி ஊக்குவிப்பு - 7.54 லட்சம் விவசாயிகள் பயன்
ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெ. டன் கொள்ளளவு கொண்ட 130 நவீன நெல் சேமிப்பு தளங்கள் கட்டுமான பணி நடைபெறுகிறது
31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்பட உள்ளன
பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு ரூ.3 ஊக்கத்தொகை வழங்க ரூ.730 கோடி நிதி ஒதுக்கப்பட்டது
5 ஆண்டில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு பாசன குளங்களில் இருப்பு
அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் பயனாளிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது
வேளாண் செயல்பாடுகளுக்காக ரூ.3,002 கோடி வட்டி மானியம் வழங்கப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் விவசாய கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன
ரூ.15,236 கோடியில் நில மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு உள்ளிட்ட பண்ணை சார் நடவடிக்கைகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ரூ.53 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளன
நிலமற்ற வேளாண் தொழிலாளர் விபத்து மரண இழப்பீடு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
வனப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
இருபோக சாகுபடி பரப்பு 2 லட்சம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu