42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
42 வயது பெண் கூட்டு பா*யல் வன்கொடுமை என புகார்
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
போரை முடிவுக்கு கொண்டுவர 3 நிபந்தனைகள்- ஈரான்
Mar 12, 2026
முகப்பு
”யாரு கெத்து?.. யாரு தல?”.. போட்டா போட்டில் நடந்த விபரீதம்..! கொத்தாக தூக்கிய பரிதாபம்..!
Sep 05, 2025 01:50 PM
131
"யாரு கெத்து?.. யாரு தல?".. போட்டா போட்டியில் நடந்த விபரீதம்..!
செங்கல்பட்டு நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்தவர்கள் குமார் மற்றும் ரவி. சிறுவர்கள் என்பதால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.. இவர்கள் இருவருமே தளபதி படத்தில் வரும் சூர்யா-தேவா போன்று நெருங்கிய நண்பர்களாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் இருவரும் மது அருந்தும் போது, ” ஏரியாவுல யாரு கெத்து? ” என்பதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் கோபமடைந்த குமார், ரவியை அருகில் கீழே கிடந்த கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட ரவி, இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குமாரை கைதுசெய்த போலீசார், அவரை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.
அதைத்தொடர்ந்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த குமார், தனது வீட்டிற்கு செல்லாமல் நேரடியாக ரவி வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது ரவியிடம், “நான் அனைத்தையும் மறந்துவிட்டேன்.. நாம் இருவரும் சமாதானமாகி எப்போதும் போல நண்பனாக இருக்கலாம்” என நைசாக பேசி அவரை மது அருந்துவதற்காக அழைத்து சென்றுள்ளார்.
அதையடுத்து இருவரும் செங்கல்பட்டு குண்டூர் ஏரியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ”என்னையே ஜெயிலுக்கு அனுப்புறியா? நான்தான் இனிமே கெத்து.. நீ இனி இருக்க கூடாது” என கொலை செய்யும் நோக்கத்தோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை சரமாரியாக தாக்கியிருக்கிறார். அப்போது ரவியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியிலிருந்தவர்கள் உடனே ஓடிவந்தனர். இதனால் பயந்துபோன குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
அப்போது பலத்த காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த ரவியை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரவியின் தாய், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் குமாரை தேடிவந்தனர்.
இதையடுத்து போலீசாரை கண்ட குமார் தப்பிக்க முயன்றிருக்கிறார். அப்போது கால் தவறி பள்ளத்தில் விழுந்த அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவருக்கு சிகிச்சையளித்து முடிந்தபின், குமார் மீது வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கெத்தாக சுற்ற நினைத்த குமாரை, கொக்கி போட்டு கொத்தாக காவல்துறையினர் தூக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu