காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
காய்கறிகளின் விலை 20% வரையில் குறைந்தது
Mar 13, 2026
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்
Mar 13, 2026
தங்கம் விலை ரூ.560 குறைந்தது
Mar 13, 2026
போரை முடிவுக்கு கொண்டுவர 3 நிபந்தனைகள்- ஈரான்
Mar 12, 2026
பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி ரௌடி வெட்டி படுகொலை
Mar 12, 2026
முகப்பு
"எரிவாயு குறித்து திட்டமிட்டு சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர்" ... டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Mar 13, 2026 02:25 AM
30
"எரிவாயு குறித்து திட்டமிட்டு சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர்" ... டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
அரசியல் கட்சிகள், ஊடகங்கள், இளைஞர்கள் என அனைவரும் இந்த இக்கட்டான சூழலில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நெக்ஸ்ட் (( NXT Summit )) மாநாட்டில் உரையாற்றிய அவர், "மத்திய கிழக்கு நாடுகளின் மோதலால் இன்று எந்த நாடும் பாதிக்கப்படாமல் இல்லை" என்றும் "இந்தியாவிலும் சமையல் எரிவாயு குறித்துச் சிலர் திட்டமிட்டுப் பீதியை உருவாக்கி வருகின்றனர்" என்றும் கூறினார்.
அப்படி வதந்திகளைப் பரப்புவோர் தங்களை மக்களிடம் அம்பலப்படுத்துவதுடன், நாட்டுக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள் என்று அவர் கூறினார். இக்கட்டான இந்தச் சூழலைப் பயன்படுத்தி எரிபொருட்களைக் கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu