தரமற்ற விடுதி உணவால் மாணவிகளுக்கு உடல்நலகுறைவு
Mar 04, 2026
முகப்பு
“உன்ன போல ஒருத்தர நா...” பாம்புகடித்த மனைவி உயிர்பெற்று திரும்பியபோது பெருங்‘காதல்’ கணவர் உயிரோடு இல்லாத பரிதாபம்!
Nov 22, 2025 04:32 PM
323
“உன்ன போல ஒருத்தர நா...” பாம்புகடித்த மனைவி உயிர்பெற்று திரும்பியபோது பெருங்‘காதல்’
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட கொல்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 60 வயது நாகராஜன்- 54 வயது லலிதா தம்பதியர்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி அனைவரும் ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில், லலிதா கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வயலில் நடவு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது, வேலை செய்துகொண்டிருக்கும்போது லலிதாவின் காலில் பாம்பு கடித்துள்ளது.
அலறித்துடித்த லலிதாவை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
லலிதாவின் கணவர் நாகராஜன் வழக்கம் போல், கூலி வேலைக்கு சென்றிருந்தபோது, மனைவிக்கு பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பதறியடித்துக்கொண்டு, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்று மனைவியை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார், நாகராஜன்.
அதன்பிறகு, மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த நாகராஜன், தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஆகிவிடுமோ என்கிற பயத்தில் விரக்தியடைந்து வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து விட்டு மயங்கி உள்ளார்.
அவரது, மகன் வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது மயங்கிய நிலையில், அருகில் களைக்கொல்லி மருந்தோடு தனது தந்தை கிடந்ததை பார்த்தவுடன், உடனடியாக காரைக்கால் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அவரை அனுமதித்துள்ளார்.
ஆனால், நாகராஜனின் மனைவி லலிதா பாம்புக்கடி சிகிச்சை பெற்று குணமடைந்து விட்டார். இந்த நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த நாகராஜன் கடந்த 6 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகராஜன் மனைவி லலிதா பாம்புக்கடிக்கு மூன்று நாட்களில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீட்டிற்கு வந்த நிலையில், மனைவி பாம்பு கடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதைப் பார்த்து மனமுடைந்து கணவர் தவறான முடிவு எடுத்து உயிரிழந்தது, அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை பிரிந்து இனி நான் எப்படி இருக்கப்போகிறேன் என ஏங்கி தவித்தவர், தன்னை ஏங்கி தவிக்கவிட்டு சென்றுவிட்டாரே என மனம் கலங்கி படுத்துள்ளார், பாம்புக்கடியிலும் உயிர்பெற்று வந்த மனைவி லலிதா. இனி, இரண்டு பிள்ளைகள்தான் அன்பையும் அரவணைப்பையும் காட்டி அவரை வளர்க்கவேண்டும்!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu