RECENT NEWS

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு...   அமைச்சர் முத்துசாமி பேச்சு

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு... அமைச்சர் முத்துசாமி பேச்சு

Feb 13, 2026

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு...   அமைச்சர் முத்துசாமி பேச்சு

'புதுமைப் பெண்' திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகள் சேர்க்கை 34 சதவீதம் அதிகரிப்பு... அமைச்சர் முத்துசாமி பேச்சு

Feb 13, 2026

முகப்பு

"போலீஸ் என்னய மிரட்டுறாங்க" பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமி கதறி அழும் அவலம்..! குற்றவாளியை காப்பாற்ற முயற்சியா?

Nov 14, 2025 05:52 AM

235

"போலீஸ் என்னய மிரட்டுறாங்க"  பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமி கதறி அழும் அவலம்..! குற்றவாளியை காப்பாற்ற முயற்சியா?

"போலீஸ் என்னய மிரட்டுறாங்க" பாலியல் புகார் அளிக்க வந்த சிறுமி கதறி அழும் அவலம்..!

பெற்ற தாயே, நான் நன்றாக வாழ வேண்டுமென்றால் நீ பாலியல் துன்புறுத்தலை பொறுத்துக் கொள் என மகளிடம் சொல்லியதாக கண்ணீர் சிந்தும் சிறுமி..புகார் கொடுக்க வந்த சிறுமியை காவல்துறை மிரட்டுவதாக கண்ணீர் மல்க வேதனை..

சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும், கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துள்ளனர்.

இரண்டு பெண் குழந்தைகளும் தாயுடன் வசித்து வந்த நிலையில், அந்த தாய், வானகரம் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்து வந்த சிவா(எ) சிலம்பரசன் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மூத்த மகள் தனது தந்தைக்கு போன் செய்து, தனது தாயின் 2வது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த குழந்தையின் பாட்டியும், போன் செய்து தயவு செய்து குழந்தையை அழைத்து வந்துவிடுங்கள் என தெரிவிக்க, குழந்தையை அவரது தந்தை அழைத்து வந்துள்ளார்.

பின்னர் தனது குழந்தையை, மனைவியின் 2வது கணவர் அடித்து துன்புறுத்தியதாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து தனது சகோதரியின் வீட்டில் மகளை தங்க வைத்தபோது, அந்த சிறுமி, அம்மாவின் 2வது கணவர் கடந்த ஒரு வருடமாக ஆபாச படத்தை காட்டி துன்புறுத்தி வந்ததாகவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, இதை எல்லாம் அம்மாவிடம் ஏன் சொல்லவில்லை என கேட்டதற்கு, அனைத்தையும் சொன்னேன், இது தெரிந்தால் என்னுடைய வாழ்க்கை வீணாகிவிடும், அதனால் பொறுத்துக் கொள் என தாயே சொன்னதாக சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் தனது தங்கைக்கும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்ததாக சிறுமி தெரிவித்துள்ளார்.

நடந்ததை எல்லாம் கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை, மாங்காடு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, இது எங்கள் காவல் நிலைய எல்லைக்குள் வராது என போலீசார் தெரிவித்ததால், மதுரவாயல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சிறுமியையும் அவரது தந்தை அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அவர்கள் நீண்ட நேரமாக காக்கவைக்கப்பட்டதாகவும், பின்னர் மதுரவாயல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரெஜினா, சிறுமியை விசாரிப்பதாக தனியாக அழைத்து சென்று, உன்னை தனியாக ஹோமில் அடைத்து விடுவோம் என மிரட்டியதாகவும், குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவர்களை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியும், தந்தையும் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட சிறுமியை போலீஸ் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies