RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

முகப்பு

மலையில் பலியிடப்பட்ட பெண் தீவைத்து எரிக்கப்பட்டது ஏன் ? கொலைக்காரன் சிக்கியது எப்படி ? உடல் தேடும் காதல் உயிரை கொல்லும்

Apr 21, 2025 04:10 PM

606

மலையில் பலியிடப்பட்ட பெண் தீவைத்து எரிக்கப்பட்டது ஏன் ? கொலைக்காரன் சிக்கியது எப்படி ? உடல் தேடும் காதல் உயிரை கொல்லும்

மலையில் பலியிடப்பட்ட பெண் தீவைத்து எரிக்கப்பட்டது ஏன் ? கொலைக்காரன் சிக்கியது எப்படி ?

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி அருகே மலைக் கட்டில் நீரோடை அருகே அடையாளம் தெரியாத இளம் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நுணுக்கமாக துப்பு துலக்கி கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்

 திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா கன்னிவாடி அருகே கொடைக்கானலுக்கு செல்லக்கூடிய தருமத்துப்பட்டி - பன்றிமலை அமைதி சோலை பகுதியில் பெண் சடலம்
இந்த சாலையிலிருந்து 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை உள்ளது.

ஹிட்டன் ஸ்பாட்டான இங்கு கடந்த 13ந்தேதி, அன்று அடையாளம் தெரியாத அளவுக்கு முழுவதுமாக எரிந்து கருகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள், கன்னிவாடி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற கன்னிவாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் இந்த மலை சாலைக்கு திரும்பும் சந்திப்பு பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் 13 ந்தேதி சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் அந்த சந்திப்பு சாலை வழியாக மலைப்பாதையில் செல்வதும் , சில மணி நேரங்களில் மீண்டும் திரும்பிச்செல்வதும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து 12 ந்தேதி பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது , அதே இரு சக்கர வாகனத்தில் காதல் ஜோடி ஒன்று அந்த சந்திப்பு சாலையை கடந்து மலைக்கு மேல் செல்வது பதிவாகி இருந்தது.

நீண்ட நேரம் கழித்து அந்த இளைஞர் மட்டும் தனியாக பைக்கை ஓட்டிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த இரு சக்கர வாகனத்தின் நம்பர் தெளிவாக பதிவாகி இருந்த வீடியோ ஒன்றை போலீசார் கைப்பற்றினர்.

அதனை வைத்து திண்டுக்கல் நத்தம், சாணார்பட்டி எமகாலபுரத்தை சேர்ந்த ஜவுளிக்கடை ஊழியர் பிரவீன் என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் மதுரை சக்தி விடியல் ஆசிரமத்தில் வளர்ந்த ஆதரவற்ற இளம் பெண் மாரியம்மாள் என்பது தெரியவந்தது.

ஆசிரமத்தின் உதவியால் 12ஆம் வகுப்பு வரை படித்த மாரியம்மாள் , திண்டுக்கல்லில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் பணிக்கு சேர்ந்தார், அப்போது அங்கே வேலைப்பார்த்து வந்த பிரவீனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பிரவீன் தன்னை மாரியம்மாளின் பாதுகாவலராக கையெழுத்திட்டு, திண்டுக்கல்லில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் சேர்த்து விட்டான்.

கடந்த ஒரு வருடமாக திண்டுக்கல்லில் இருவரும் லிவிங் டுகெதரில் இருந்ததாக கூறப்படுகின்றது. இவர்களின் காதால் எல்லை மீறியதால் இரண்டு முறை மாரியம்மாள் தனது கர்ப்பத்தை கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மாரியம்மாள், பிரவீனை தொடர்ந்து வற்புறுத்தியதால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், காதலியான மாரியம்மாளை கடந்த 12ந்தேதி அமைதி சோலை பகுதிக்கு ஜாலி ட்ரிப் போய்வரலாம் என்று அழைத்துச்சென்றுள்ளான்.

அங்கு வைத்து காதலியிடம் அத்துமீறியதோடு அவரை கொலை செய்து சடலத்தை அப்படியே போட்டு விட்டு பிரவீன் திண்டுக்கல் திரும்பியதாக கூறப்படுகின்றது.

கொலையான பெண் யார் என்று அடையாளம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பிரவீன் மறு நாள் 13 ந்தேதி பெட்ரோல் வாங்கிச் சென்று மாரியம்மாளின் சடலத்தின் மீது ஊற்றி தீ வைத்து எரித்ததாக வாக்குமூலம் அளித்திருப்பதாக் போலீசார் தெரிவித்தனர்


பிரவீனை கைது செய்த போலீசார் , சிசிடிவி மட்டும் இல்லையென்றால் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கி இருக்க முடியாது என்று தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies