BIG STORIES
கல்லூரி மாணவிக்கு கத்திகுத்து.. பொண்ணுங்க என்ன Property யா? கொஞ்சமாச்சும் திருந்துங்க Dude.!
Jan 24, 2026 05:57 AM
28
கல்லூரி மாணவிக்கு கத்திகுத்து
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது மாணவன் ஹர்ஷவர்தன், சரவணம்பட்டியிலுள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்துள்ளார்.
இவர், அதே கல்லூரியைச் சேர்ந்த 17 வயது மாணவி, தன்னிடம் நட்பாக பேசியதை தவறாக புரிந்துகொண்டு, தன்னை அந்த மாணவி காதலிப்பதாக சொல்லிக்கொண்டு திரிந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், இவரிடம் ஃப்ரெண்ட்ஷிப்பாக பேசியதுபோலவே மற்ற நண்பர்களிடமும் அந்த மாணவி, கேஷுவலாக பேசி வந்ததாக கூறப்படுகிறது...
இதனால், தன்னைத் தவிர மற்றவர்கள் யாரிடமும் பேசக்கூடாது என மாணவன் ஹர்ஷவர்தன் அந்த மாணவியை மிரட்ட ஆரம்பித்துள்ளார். “உன்னைப்போலவே அவர்களும் எனது நண்பர்கள்தான். அவர்களிடம் நான் ஏன் பேசக்கூடாது? என்னை யாரிடமும் பேசக்கூடாது என கட்டுப்படுத்த உனக்கு எந்த ரைட்ஸும் இல்லை” என மாணவி தெளிவாக கூறியதோடு, வழக்கம்போல் வகுப்பிலுள்ள மற்றவர்களிடமும் கேஷுவலாக பேசி, பழக ஆரம்பித்துள்ளார்.
ஆனால், பெண் என்பவள் ப்ராப்பர்ட்டி அல்ல. ஒரு மனித உயிர். அதுவும், யாரிடம் பேசவேண்டும், பேசக்கூடாது என கட்டுப்படுத்தும் உரிமை யாருக்குமே இல்லை. சமீபத்தில் வெளியான ட்யூட் படத்தில்கூட இப்படியொரு காட்சி அமைந்திருக்கும். இது, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நல்ல சிந்தனையை உருவாக்கும் விதமாக அமைந்ததாக கூறப்பட்டது.
அப்படியிருக்க, “அவள் என் ஆள், உன் ஆள்” என சொல்லிக்கொண்டு கட்டுப்படுத்த தனக்கு உரிமை இல்லை என்பதை கொஞ்சம்கூட உணராத கல்லூரி மாணவன் ஹர்ஷவர்தன், அந்த மாணவியிடம் கோபம் அடைந்து, சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், மாணவியின் மீது விஷமத்தனமான கோபத்துடன் இருந்த மாணவன் ஹர்ஷவர்தன், ஜனவரி 22 ஆம் தேதி, மாணவியை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு மாணவி மறுத்ததால், கொலை வெறி திட்டத்தோடு மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கல்லூரி வளாகத்திலேயே மாணவியின் கழுத்து மற்றும் கைகளில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.
கழுத்து மற்றும் கைகளில் ரத்தக்காயம் ஏற்பட்டு மாணவி அலறித்துடித்துள்ளார். இதைக் கண்டு சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஓடிவந்து, உடனடியாக மாணவியை மீட்டு, அதே கல்லூரி குழுமத்திற்குச் சொந்தமான மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
குற்றச்சம்பவம் தொடர்பான 17 வயது மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், கோவை, சரவணம்பட்டி காவல்நிலையத்தில் கொலைமுயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாணவன் ஹர்ஷவர்தனை கைது செய்து போலீஸார், சிறையில் அடைத்தனர்.
நட்பு, காதல் குறித்த அடிப்படை புரிதல் இன்மையே இதுபோன்ற வன்முறைக்கு காரணம். ஒரு தலை காதலோ, இரு தலைக்காதலோ, தருதலைக் காதலோ ‘பொசசிவ்’ என்னும் பெயரில் ஒருவரை கட்டுப்படுத்துவது, ப்ளாக் மெயில் செய்வது, கொலை செய்ய முயற்சிப்பது எல்லாம் ‘காதல்’ என்கிற வரையறைக்குள்ளேயே வராது. இதுபோன்ற, வாழ்வியல் ஆலோசனைகளை பெற்றோர்கள் போதிக்கவேண்டும். சிறையில் இதற்காகவே சம்பளம் வாங்கிக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருக்கும் Probation Officer எனப்படும் நன்னடத்தை அலுவலர்கள், மாணவர் ஹர்ஷவர்தன் போன்றவர்கள் ஜாமினில் வெளிவரும்போது, சரியான உளவியல் ஆலோசனைகளை வழங்கி அனுப்பவேண்டும் என்கிறார்கள், உளவியல் வல்லுநர்கள்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu