ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
BIG STORIES
அதிமுக எம்.எல்.ஏ கொலை.. பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்..! 20 ஆண்டு வழக்கில் தீர்ப்பு
Nov 22, 2025 01:19 AM
132
அதிமுக எம்.எல்.ஏ கொலை.. பவாரியா கொள்ளையர்கள் 3 பேரும் குற்றவாளிகள்..!
கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல் ஏ சுதர்னத்தை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு ஏராளமான நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பவாரியா கொள்ளையர்களில் 3 பேரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது, 20 ஆண்டுகள் கழித்து கிடைத்த தீர்ப்பு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்தவர் சுதர்சனம். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 தேதி அதிகாலை சுமார் 3 மணிக்கு சுதர்சனம் வீட்டிற்குள் புகுந்த வடநாட்டைச் சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டு அவரை கொலை செய்ததுடன், சுமார் 62 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆப்ரஹாம் லிங்கன் விசாரித்து வந்தார். இந்தவழக்கில், காவல் துறை தரப்பில் 86 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். அனைத்து தரப்பு சாட்சிகள் மற்றும் குறுக்கு விசாரணையும் முடிந்த நிலையில், 20 வருடங்கள் கடந்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, குற்ற குற்றஞ்சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க பட்டுள்ளது. எனவே இவர்களை குற்றவாளி என தீர்மானிப்பதாக அறிவித்தார். குற்றவாளி, ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் க்கான தண்டனை விவரங்களை நவம்பர் 24ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
வழக்கின் தீர்ப்பை அறிவதற்காக நேரில் வந்திருந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஜாங்கிட் கூறும் போது, தாங்கள் கட்டைவிரல் ரேகையை தடயமாக வைத்து துப்பு துலக்கியதாகவும் , தமிழக காவல் அதிகாரிகள் சிறப்பாக வழக்கை நடத்தியதால் கொள்ளையர்களை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்தார்
சம்பவத்தை நேரில் பார்த்த அவரது மகன் விஜயகுமார் காவல் அதிகாரிகளை பாராட்டினார்
அதே நேரத்தில் இந்த வழக்கில் கொள்ளை சம்பவத்தை நிரூபித்த அரசு தரப்பு, சுதர்சனத்தை பவாரியா கொள்ளையர்கள் தான் கொலை செய்தனர் என்பதை நிரூபிக்க தவறியதாக தெரிவித்த எதிர்தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, அதனால் குறைந்தபடச தண்டனை வழங்க கோரி இருப்பதாக தெரிவித்தார்
தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவத்தில் 1300 சவரனுக்கும் அதிகமாக பறித்துச்சென்றதாக கைதான இந்த பவாரியா கொள்ளையர்களிடம் இருந்து, 4 லாரிகளை மட்டுமே பறிமுதல் செய்ததாக நீதிமன்றத்தில் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu