ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
Mar 06, 2026
நேபாள பிரதமராக பதவியேற்கும் ராப் பாடகர்
Mar 06, 2026
அரசுப் பேருந்து மோதியதில் லாரி கவிழ்ந்து விபத்து
Mar 06, 2026
முகப்பு
ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
Mar 06, 2026 10:06 AM
29
ஈரான் கடற்படை கப்பலுக்கு இலங்கை அரசு உதவிக்கரம்
இலங்கை அருகே, இந்திய பெருங்கடலில் வைத்து ஈரானிய போர் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த நிலையில், அதே பகுதியில் இருந்த மற்றொரு ஈரானிய போர் கப்பலில் இருந்த 208 மாலுமிகளை மீட்டுவருவதாக இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படையுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு சர்வதேச கடற்பரப்பு வழியாக தாயகம் திரும்பிக்கொண்டிருந்த IRIS Dena என்ற ஈரானிய போர் கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை தாக்குதல் நடத்தி மூழ்கடித்தது.
87 பேர் இறந்த நிலையில், மாயமான பலரை இலங்கை கடற்படையினர் தேடிவருகின்றனர்.
இந்நிலையில், கொழும்பு அருகே இருந்த மற்றொரு ஈரானிய கடற்படை கப்பலான Bushehrம் அமெரிக்காவால் தாக்கப்படக்கூடும் என அஞ்சுவதால் அதில் இருந்த மாலுமிகளுக்கு இலங்கை அரசு உதவிக்கரம் நீட்டியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu