ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
தமிழ்நாடு
உலுக்கிய டபுள் மர்டர் பயங்கரம் கூட்டத்தில் போலீஸிடம் நீதிகேட்டு முதல் ஆளாக நின்று கதறிய கொ**காரன் சிக்கியது எப்படி..?
Nov 13, 2025 01:22 PM
211
உலுக்கிய டபுள் மர்டர் பயங்கரம்... போலீஸுடன் உலாவிய கொ**காரன் சிக்கியது எப்படி?
மாவட்டத்தையே உலுக்கிய இரட்டைப் படுகொலை நடந்த இடத்தில், காவல்துறையினர் விசாரணை செய்துகொண்டிருக்கும்போது, கூட்டத்தை விலக்கி நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு போலீஸிடம் வந்து “கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது முகத்தைக்கூட காட்டமாட்டீங்களா சார்? என்ன சார் இதெல்லாம்?” என்கிற ரீதியில் பாவமாக கேட்டுக்கொண்டிருப்பதும், கூட்டத்தோடு கூட்டமாக போலீஸாருடனேயே ஒட்டி உரசிக்கொண்டு, பளிச்சென்ற உடையில் பட்டென்று தெரியும் அளவுக்கு பவ்யமாய் அப்பாவிபோல் நின்றுகொண்டிருக்கும் இவர்தான், சுட்டு பிடிக்கப்பட்ட இரட்டை படுகொலை குற்றவாளி நாகராஜ்.
இன்னும் கொஞ்சநாள் இவரை கண்டுபிடித்து கைது செய்யாமல் விட்டிருந்தால், இவர் செய்த இரட்டை படுகொலைக்கு, இவரே நீதி கேட்டு, கோட்டைவரை நெடும்பயணம் வந்திருப்பார்போல! போலீஸாரிடமிருந்து தப்பிக்க, இவ்வளவு ஆக்டிங் கொடுத்தும், அனைத்து ராஜதந்திரங்களும் வீணாகிப்போனவராய் காலில் துப்பாக்கிச்சூட்டுடன் மருத்துவமனயில் மல்லாக்க படுத்துக்கிடக்கும், நாகராஜ் செய்த படுகொலை பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் நச்சாடை தவிர்த்தருளியசாமி கோயிலில், இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மற்றும் சங்கரபாண்டி ஆகிய இருவரை, 10 ஆம் திங்கட்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்து, கோயில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், படுகொலை நடந்த கோவிலில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், காவலாளிகளை கொலை செய்த குற்றவாளி நாகராஜ் எவ்வித பதட்டமும் இன்றி பொதுமக்களுடன் பொதுமக்களாக நின்று பேசிக்கொண்டிருந்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், போலீஸாரிடம் சகஜமாக பேசிக்கொண்டிருந்ததோடு, படுகொலை செய்த குற்றவாளியை கைது செய்யவில்லை என்றால், நீதி கேட்டு பஸ் மறியல் செய்வோம் என்றெல்லாம் உக்கிரமாக பேசியுள்ளார், நாகராஜ்.
இந்த படுகொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைத்துள்ளதாகவும், இச்சம்பவத்தில் உள்ளூரைச் சேர்ந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்திருந்தார்.
கோயிலில் இருந்த சில சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் கால்தடம் மற்றும் கைரேகை சேகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்தான், காவலாளிகள் பேச்சிமுத்து, சங்கர பாண்டியன் இருவர் படுகொலை வழக்கில் காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தேடி வந்த நிலையில் நள்ளிரவில் நாகராஜை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போதுதான், விசாரணை நடந்த இடத்தில் மிகப்பெரிய சமூக போராளிபோல் நின்று கொண்டு போலீஸாரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு நின்றதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நாகராஜ், உண்டியல் பணத்தை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கல்லணை ஆஞ்சநேயர் கோயில் அருகே மறைத்து வைத்திருப்பதாக காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
பணத்தை மீட்பதற்காக நாகராஜை அழைத்துக்கொண்டு சேத்தூர் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், சார்பு ஆய்வாளர் கோட்டியப்பசாமி உள்ளிட்டோர் அங்கு சென்றுள்ளனர். அப்போது, பணத்துடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த அரிவாளை எடுத்த கொலையாளி நாகராஜ், சார்பு ஆய்வாளரின் இடது கையில் தாக்கி விட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால், சார்பு ஆய்வாளரின் உயிரைக் காப்பாற்ற, ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், நாகராஜின் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக கூறப்படுகிறது. காயம் அடைந்த சார்பு ஆய்வாளர் மற்றும் கொலையாளி நாகராஜ் ஆகிய இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விசாரணை மேற்கொண்டதில் நாகராஜ் இதற்கு முன்பு திருட்டு, வழிப்பறி, அடிதடி உட்பட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் யார் யாருக்கெல்லாம் இந்த படுகொலையில் தொடர்பு இருக்கிறது என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu