ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
ஏப்ரல் 23 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்
Mar 15, 2026
இஸ்ரேல் பிரதமரை கொல்லாமல் விட மாட்டோம்- ஈரான்
Mar 15, 2026
மரக்கன்றுகள் நட்ட வடகொரியா அதிபர் கிம் ஜோங்
Mar 15, 2026
கேஸ் சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் உயிரிழப்பு
Mar 15, 2026
இந்தியா
வரலாறு படைத்த பெண் அதிகாரி.. 5 தலைமுறையாக ராணுவத்தில் சேவை..!
Sep 08, 2025 07:23 AM
168
வரலாறு படைத்த பெண் அதிகாரி
சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் 130 ஆண்கள் மற்றும் 25 பெண்கள் என மொத்தம் 155 அதிகாரிகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிகழ்வில் ஒன்பது நட்பு வெளிநாடுகளைச் சேர்ந்த 9 ஆண் வீரர்கள் மற்றும் 12 பெண் வீரர்களும் தங்கள் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, எல்லைகளுக்கு அப்பால் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தினர்.
இந்த நிலையில், இந்த நிகழ்வில் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் லெப்டினன்ட் பருல் தத்வால் என்பவர். அதற்கு காரணம் இவர், புகழ்பெற்ற ராணுவ குடும்பத்தின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை பெற்றிருக்கிறார். தற்போது ராணுவ ஆயுதப் படையில் சேர்ந்ததன் மூலம் பருல் வரலாறு படைத்துள்ளார்.
விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் அணிவகுப்பை பார்வையிட்டு, சிறந்த கேடட்களுக்கு விருதுகளை வழங்கினார். அதில் ACA ராஜ் பிஸ்வாஸுக்கு வாள் ஆஃப் ஹானர் மற்றும் வெள்ளிப் பதக்கமும், AUO பருல் தத்வாலுக்கு OTA தங்கப் பதக்கத்தையும், BUO பிரஞ்சல் தீட்சித்துக்கு வெண்கலப் பதக்கத்தையும் வழங்கினார்.
பயிற்சியாளர்களில் முதலிடம் பிடித்த அவர், தனது சிறப்பான கல்வி திறனுக்கும் தலைமைத்துவத்திற்கும் இந்திய குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் மற்றும் ஓ.டி.ஏ தங்கப் பதக்கம் பெற்றார்.
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டம் ஜனௌரி கிராமத்தைச் சேர்ந்தவர் லெப்டினன்ட் தத்வால். அவரது குடும்பத்தின் சிறப்பான ராணுவ பாரம்பரியம் நூற்றாண்டுக்கு மேலாக நீடித்துள்ளது. பருலின் எள்ளுத் தாத்தா, சுபேதார் ஹர்னாம் சிங், 1896 மற்றும் 1924 க்கு இடையில் 74 பஞ்சாபியர்களுடன் ராணுவத்தில் பணியாற்றிவர். மேலும் இவரது கொள்ளுத் தாத்தா, மேஜர் எல்.எஸ். தத்வால், தாத்தா கர்னல் தல்ஜித் சிங் தத்வால் ஆகியோரும் ராணுவத்தில் மிகச்சிறப்பாக பணியாற்றியவர்கள்.
தற்போது, அவரது தந்தை, மேஜர் ஜெனரல் கே.எஸ். தத்வால் மற்றும் சகோதரர் கேப்டன் தனஞ்சய் தத்வால் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த பாரம்பரிய பெருமை மிகு வரிசையில் பருல் தத்வாலும் தற்போது இணைந்திருக்கிறார். இதன் மூலம், ஒரே குடும்பத்தில் மூன்று ராணுவ அதிகாரிகள் என்ற சாதனை நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி பருல் தத்வால் தான் அவர் குடும்பத்தின் முதல் பெண் ராணுவ அதிகாரி என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார். அவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu